தமிழ் சினிமாவில் காலாகாலம் இருந்து வந்த மரபை உடைத்த “விதி” படம் – பாக்யராஜின் அந்த கேமியோ

0
242
Bhagyaraj
- Advertisement -

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் விஜயன் நடிகர் திலகம் சிவாஜியின் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ரீமேக் படங்களை எடுப்பார் என்றாலும் அது தெரியாத வண்ணம் மிகவும் நேர்த்தியாக படங்களை இயக்கியிருப்பர். அந்த வகையில் கே விஜயன் இயக்கியிருக்கும் திரைப்படம் “விதி”. இப்படத்தில் தமிழ் சினிமாவில் திரைக்கதையின் மன்னன் எண்ணப்படும் இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

கதையின் தொடக்கம் :

கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான விதி திரைப்படத்தில் தொடக்கத்திலே படம் தொடங்குகிறது. மோகன் மற்றும் அவரது மனைவி சத்யகலா ஒரு பள்ளிக்கு செய்கிறார்கள். அங்கு ஒரு மாணவன் அதிக விருதுகளை வாங்கி குவிக்கிறார். அதனை பார்த்த குழந்தை பாக்கியம் இல்லாத இவர்களுக்கு ஆசையாக இருக்க “யாருப்பா உங்க அப்பா” என்று கேட்க அந்த குழந்தை மோகனை நோக்கி கைகளை காட்டுகிறார். இது சசிகலாவுக்கு மோகனுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

ராதாவை மயக்கும் ராஜா :

இந்த பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் தான் நடிகை பூர்ணிமா(ராதா), அவர்களை அம்மா என்கிறான் அந்த சிறுவன். குழப்பமடைந்த சத்யகலா ராதாவிடம் சென்று விசாரிக்க கதை தொடங்குகிறது. கதை பணக்காரவீட்டுக்கு மோகன்(ராஜா) ராதாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் பூர்ணிமா புறக்கணிக்க தொடர்ந்து மோகன் நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்ற ஒரு அன்றய கதாயாகன் ஆயத்தை கொண்டு நாயகி ராதவை காதலிக்க வைக்கிறார்.

சூடுபிடிக்கும் கதைக்களம் :

பின்னர் இவர்களின் காதல் படுக்கை அரை வரை செய்கிறது. இதனால் கருவுறும் ராதா திருமணத்திற்கு வற்புறுத்ததும் போது மறுத்து எகத்தாளமாக பேசுகிறார் ராஜா என்கிற மோகன். இதனால் கொதித்தெழுந்த அவர் இது போல இனி யாருக்கும் நடக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர கதையானது விறுவிறுப்பாகிறது. அதாவது ராஜாவின் தந்தை பிரபலமான வழக்கறிஞர் “டைகர்” இவர் ராஜாவுக்கு வக்கீலாக வர. ராதாவை போன்று சீரழிக்கப்பட்ட சுஜாதா ராதவிர்க்கு வழக்கறினராக வர கதை’சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.

-விளம்பரம்-

அனல் பறக்கும் நீதிமன்ற காட்சிகள் :

ராஜாவாக மோகனும், ராதாவாக பூர்ணிமாவும் மிகப்பிரமாதமாக நடித்திருந்தனர. இப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகளில் லாஜிக் மிட்டேக்குகள் இருந்தாலும் மோகனுடைய அப்பாவாக வரும் ஜெயசங்கர் மற்றும் சுஜாதாவிற்கு இடையே நடக்கும் வாக்குவாதம் அனல் பறக்கிறது. அதிலும் சில காட்சிகளில் மோகன் தந்தையான ஜெய்சங்கர் ராதாவை மலிவாக பேசும் போது கூனி குறுகி நிற்ப்பார் ராதா. அந்த வகையில் வகையான காட்சிகளில் மிகவும் திறமையாக சரியான உடல் மொழியில் செய்சங்கர் நடித்திருப்பர்.

சிறப்பு கதாபாத்திரத்தில் பாக்யராஜ் :

மேலும் இப்படத்தில் திடீரென வரும் பாக்யராஜ் கதாபாத்திரத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் ராதா வழக்கு பற்றி கேட்பார். அந்த காட்சியில் பாக்யராஜ் அந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் பிரமாதமானது. பாக்யராஜ் மரத்தடி பஞ்சாயத்து செய்பவர்களிடம் “எதாவது 5 பத்தினிகளின் பெயர்களை சொல்லுங்கள் எனக் கூற அவர்கள் நடிகைகள் பெயர்களை கூறுவார்கள். அதற்கு பாக்யராஜ் ஏன் உங்களுடைய அம்மா, மனைவியின் பெயரை சொல்லவில்லை என புத்திசாலித்தனமாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

மரபை உடைத்த திரைப்படம் :

இந்த கதையின் மூலம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தால் அவனையே திருமணம் செய்து கொள்வதில் தான் அந்த பெண்களின் ஒழுக்கம் இருக்கிறது என்றா நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வந்த மரபை உடைத்து “தன்னை சீரழித்தவனை சட்டத்தின் கீழ் நிறுத்தி துணிச்சலாக மட்டுமில்லாமல், தனியாகவும் ஒரு பெண்ணால் இந்த சமூதாயத்தில் வாழ முடியும் வேண்டும் என்று காட்டிய ராதாவின் கதாபாத்திரம் முன்னுதாரணமாக இன்று வரையில் இருந்து வருகிறது.

Advertisement