தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபாஸ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தி ராஜா சாப். இந்த படத்தை இயக்குனர் மாருதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், திதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் காமெடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் பிரபாஸிற்கு யாருமே இல்லை, ஒரு அனாதையாக இருக்கிறார். ஒரு பாட்டியின் வளர்ப்பில் தான் பிரபாஸ் வளர்ந்து வருகிறார். அந்த பாட்டி எப்போதுமே தொலைந்து போன தன்னுடைய கணவரை பற்றி தான் பேசிக் கொண்டே இருப்பார். அவர் ஒரு நியாபக மறதி பேஷண்ட். இருந்தாலுமே அவர் தன் கணவரை பற்றி எதையும் மறக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக தன் கணவரை பார்க்க வேண்டும் என்று பிரபாஸிடம் சொல்கிறார்.

இதனால் தன்னை வளர்த்த பாட்டிக்காக தாத்தாவை தேடி செல்கிறார் பிரபாஸ். போகும் இடத்தில் நிதி அகர்வால், மாளவிகாவுடன் காதல் கலாட்டா நடக்கிறது. அதே நேரத்தில் தாத்தாவான சஞ்சய் தத் ஒரு மந்திரவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரிய வருகிறது. இன்னொரு பக்கம் சமுத்திரகனியும்
சஞ்சய் தத்தை தேடி வருகிறார். அதற்கு பிறகு என்னானது? சஞ்சய் தத் யார்? பிரபாஸ் அவரை கண்டுபிடித்தாரா? சமுத்திரக்கனிக்கும் சஞ்சய் தத்துக்கும் இடையே என்ன பிரச்சனை?
பாட்டியின் ஆசை நிறைவேறியதா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.
படத்தின் ஹீரோ பிரபாஸ் தனி ஆளாக முழு படத்தையுமே தாங்கி பிடித்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
எப்போதும் ஆக்ஷனில் இறங்கி இருக்கும் பிரபாஸ் நீண்ட நாள் கழித்து ஒரு செம ஜாலியான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலக்கி இருக்கிறார். கிளைமாக்ஸில் பிரபாஸின் காமெடி எல்லாம் அட்ராசிட்டியாக இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் ஹீரோயினியாக மாளவிகா, நிதி அகர்வால், ரித்தி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் தொடக்கத்தில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் கதை சுற்றிக் கொண்டிருக்கிறது. பொறுமையாக தான் செல்கிறது. இடைவெளிக்கு பிறகு தான் படம் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி எல்லாம் சரவெடியாக இருக்கிறது. படத்தினுடைய டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருக்கிறது. தமன் இசை துள்ளலாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு ஒரு அருமையான படமாக இருக்கிறது.
நிறை:
பிரபாஸ் நடிப்பு
கதைக்களம்
இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது
கிளைமாக்ஸ் சூப்பர்
டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருக்கிறது

குறை:
முதல் பாதி பொறுமையாக போகிறது
சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் தி ராஜா சாப் - பேண்டஸி ஹாரர் காமெடி






