சமந்தாவிற்கு முன்பே ஸ்ருதி ஹாசனை காதலிதாரா நாக சைதன்யா? இவரால் ப்ரேக் அப் ஆனதா?

0
313
- Advertisement -

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

-விளம்பரம்-

தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

ஸ்ருதிஹசன் பற்றிய கிசுகிசு :

சமீபத்தில் கூட தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் பாலையாவுடன் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரை பற்றி அவ்வபோது சில கிசுகிசு வருவதும், அவற்றிக்கு ஸ்ருதிஹாசன் பதிலடி கொடுத்தவரும் இருந்தார். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியாவை திருமணம் செய்த ரன்பீர் கபூருடன் கூட சில கிசுகிசு வந்தது. அதற்கு அவரும் பதிலடி கொடுத்துவிட்டார். ஆனால் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா உடனான கிசுகிசுக்களை மட்டும் இன்னும் எந்த காரணமும் சொல்லாமல் இருக்கிறார்.

ஸ்ருதிஹாசனை டேட்டிங் செய்த நாகசைதன்யா :

நடிகர் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டுகளில் இவர் நடிகர் ஸ்ருதி ஹாசனுடன் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் கிளம்பின. அதோடு இருவரும் திருமணம்செய்து கொள்ள இருப்பதுவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் விழா ஒன்றின் போது நாக சைதன்யாவை சந்தித்த ஸ்ருதிஹசன் தன்னுடைய நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அவர்களின் காதல் முடிவுக்கு வந்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிரிந்ததற்க்கான காரணம் :

ஆனால் இவை எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலித்தனரா இல்லையா என்பது பலரும் அறியாத ஒன்றுதான். அப்படிப்பட்ட நிலையில் இவர்கள் காதலிக்கின்றனர் என்ற செய்தி மிகவும் வைரலாக இருந்து வந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிரேமம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். ஆனால், ஒரு சில வருடங்களிலேயே அவர்களின் காதல் முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் மனம் ஒன்றி பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அவர்களின் காதல் பிரிவுக்கு காரணம் ஸ்ருதியின் தங்கை அக்ஷரா என்று கூறப்பட்டாலும், வெளிப்படையான காரணம் எதுவும் வெளியாகவில்லை

அதற்கு பிறகுதான் நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் தற்போது விபரீதத்தில் முடித்து இருவரும் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது ஸ்ருதி ஹசன் வேறொருவரை காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement