ஷூட்டிங்கை கூட விட்டுவிட்டு 1.75 லட்சம் செலவு செய்து கமல் படத்தை பார்த்துள்ள அமீர் – அப்படி என்ன படம் பாருங்க.

0
655
amir
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற படம் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது இவர் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இயக்குனர் அமீர் உடைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஜீ தமிழில் ஓளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்ட வீடியோ. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. இது விவாத மேடை பேச்சு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரபல இயக்குனர் பழனியப்பன். மேலும், இந்த நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

தமிழா தமிழா நிகழ்ச்சி:

இதில் பல சமூக பிரச்சினைகளையும், கருத்துக்களையும் பற்றி பேசப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு முறை இயக்குனர் அமீர் வந்திருந்தார். அப்போது அமீர் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை இயக்குனர் பழனியப்பன் பகிர்ந்திருக்கிறார். அது சம்பந்தமான வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, அமீர் தன்னுடைய இரண்டாவது படமான ராம் படத்தை அவரே இயக்கி தயாரிக்கிறார். அப்போது கொடைக்கானலில் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இயக்குனர் அமீர் பற்றிய வீடியோ:

ஒரு நாள் அமீர் எல்லோரையும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு மதுரைக்குக் கிளம்பி போகிறார். இவர் பணம் ரெடி பண்ண தான் சென்றிருக்கிறார் என்று நினைத்து எல்லோரும் கொடைக்கானலில் காத்திருக்கிறார்கள். காலை முடிந்து மதியம் வந்தவுடன் மேனேஜர் அமீருக்கு போன் செய்கிறார். அப்போது அமீர் எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டு இருங்கள் வந்துவிடுகிறேன் என்று சொல்கிறார். பின் மாலை வந்தவுடன் அங்கு இருட்டு வந்து விடும்.

-விளம்பரம்-

ராம் படத்தின் படப்பிடிப்பு:

அதனால் அந்த நேரத்தில் படப்பிடிப்பு எடுக்க முடியாது. உடனே மேனஜர், அமீருக்கு ஃபோன் பண்ணி ஏன் வரவில்லை? என்று கேட்கிறார். உடனே சரி எல்லோரையும் ஹோட்டலுக்கு போகச் சொல்லி விடு. நாளைக்கு படப்பிடிப்பை தொடங்கலாம் என்று சொல்லிவிட்டார். உடனே மேனேஜரும் சரி நீங்கள் வாருங்கள். உங்களுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அமீர் மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு செல்கிறார். அப்போது மேனேஜர் பணம் ரெடி பண்ணிட்டீங்களா என்று அமீர் இடம் கேட்கிறார்.

விருமாண்டி படத்துக்கு சென்ற அமீர்:

அதற்கு அமீர் பணமா? நான் எங்க பணத்தை ரெடி பண்ணேன். விருமாண்டி பட ரிலீஸ் அதனால் தான் போயிருந்தேன் என்று சொன்னவுடன் மேனேஜருக்கு ஒரே ஷாக். விருமாண்டி படத்திற்காக ஒரு நாளைக்கு ஒன்றரை முக்கால் லட்சம் செலவு செய்து படத்தை பார்த்தது அமீர் தான். இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் உடைய படப்பிடிப்பு செலவு ஒன்றரை முக்கால் லட்சம் ஆகும் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement