17 கோடி ரூபாய் ஊசியை செலுத்தினால் தான் என் குழந்தையின் உயிரை காப்பற்ற முடியும். தமிழக அரசிடம் உதவியை நாட ஆட்சியரிடம் மனு அளித்த இளம்பெண்.

0
1465
- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த  தீபன் (36 வயது) இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவியின் பெயர் ரம்யா (31 வயது). அவரது மனைவி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் நேற்று கண்ணீர் மல்க ஒரு மனுவை அளித்துள்ளார். அவரது பெயர் அதில் தனது குழந்தையின் உயிரை காப்பற்ற 17 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை பெற உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

-விளம்பரம்-

மனுவில் உள்ளவை:

அந்த மனுவில் கூறியிருப்பது என்னவென்றால், எனக்கு 2021 ஆம் ஆண்டு எனக்கு முதல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தை பிறந்த முதல் 7 மாதங்களுக்கு ஆரோக்கியமாகவே இருந்தது அதன் பிறகு அக்குழந்தை. உடல் நிலை பாதிக்கப்பட்டு திடிரென உயிரிழந்தது. அதன் பிறகு எனக்கு 2 வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை மற்ற குழந்தைகள் போலவே ஆரோக்கியமாகவே இருந்தது. பின் மாதங்கள் செல்ல செல்ல குழந்தையின் உடம்பில் மாற்றங்கள் கவனித்து வந்தோம். 3 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் கால்களில் அசைவுகள் ஏதும் தெரியவில்லை. என்றும் அந்த மனுவில் அந்த பெண்மணி கூறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு குழந்தையின் கழுத்து நிற்கவில்லை என்றும், அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது என்றும் அந்த பெண்மணி அதில் கூறியிருந்தார். மேலும் அந்த மனுவில் தனது கணவர் தீபன் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது மேலும் எனக்கு துன்பத்தையே அளித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே எனக்கு சில மாதங்கள் ஆனது என்றும் அதில் கூறியிருந்தார். குழந்தையின் உயிரை காப்பாற்ற நினைத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றேன். அங்கு எனக்கு மேலும் பேரதிர்ச்சியாக இருந்தது. மருத்துவ மனையில் இது மிக அரிய நோய் என்றும் கூறியிருந்தனர்.

நோய் கூறித்து கூறிய மருத்துவ மனை:

குழந்தையை பரிசோதனை செய்த பிறகு கூறிய மருத்தவர்கள் இது உலகில் உள்ள அரிய நோய் என்றும் கூறினார்கள். அந்த நோயின் பெயர் “ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி’ வகை – 1 நோய் என்றும் கூறினார்கள். உடனடியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் குழந்தை உயிரிழக்க நேரிடும் என்றும் கூறினார்கள் இந்த வகை நோயிக்காக ஊசியின் விலை 17 கோடி ருபாய் என்றும், அந்த ஊசி இந்தியாவில் கிடைக்காது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக அந்த பெண்மணி மனுவில் கூறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

எனது குழந்தையை காப்பாற்றி தர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். 2 வருடங்களுக்கு மூன் மும்பையில் ஒரு குழந்தைக்கு இதே நோய் தாக்கிஇருந்தது அந்த ஊசி செலுத்திய பிறகு அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும் அந்த பெண் கூறியிருந்தார். அந்த பெண்மணியிடம் மனுவை பெற்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மருத்துவம் மற்றும் ஊரக உள்ளாட்சி இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.      

Advertisement