ஜனவரி 1 முதல் திரையரங்குகளுக்கு புதிய கட்டணம்..!எந்த திரையரங்குகளுக்கு என்ன கட்டணம்..!

0
776
Cinima-ticket

சினிமா, மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. தற்போது உள்ள நிலையில் வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் திரையரங்கம்,மால் என்று குடும்ப ரசிகர்கள் சென்று தான் வருகின்றனர்.

ஆனால், திரையரங்குகளுக்கு சென்று படத்தின் டிக்கெட் விலையை கண்டால் நமக்கு நெஞ்சு வலியே ஏற்பட்டு விடுகிறது ஒரு சராசரி குடும்பம் படம் பார்க்க செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1500 முதல் 2000 ரூபாய் செலவு செய்தே ஆக வேண்டும்.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே திரையரங்குகளில் விற்கும் டிக்கெட் விலையும் மேலும் பார்க்கிங், உணவு போன்றவற்றின் விலையும் தான். இதனை கட்டுப்படுத்த முதற்கட்டமாக டிக்கெட் விலையில் GST வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் புத்தாண்டு ஜனவரி 1 முதல் இந்த திட்டம் அமல் படுத்தப்படுகிறது. இதன்படி புதிய டிக்கெட் விலை பட்டியல் இதோ.

-விளம்பரம்-

நகரத்தில் உள்ள திரையரங்குகள்:

ரூ 150 டிக்கெட் – ரூ 135
ரூ 120 டிக்கெட் – ரூ 108
ரூ 100க்கு குறைவான டிக்கெட் – ரூ 6 குறைவு

சத்யம், எஸ்கேப், பி.வி.ஆர், ஐநாக்ஸ், மால் போன்ற தியேட்டர்கள்

ரூ 180 டிக்கெட் – ரூ 165
ரூ 170 டிக்கெட் – ரூ 158
ரூ 160 டிக்கெட் – ரூ 130
ரூ 150 டிக்கெட் – ரூ 120

Advertisement