இதே ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷின் 5வது படம் – எப்படி இருக்கிறது ‘தீராக் காதல்’ – முழு விமர்சனம்.

0
3359
- Advertisement -

இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தீராக் காதல். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் தீராக் காதல் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஜெய் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். பின் ஒரு நாள் வேலை காரணமாக ஜெய் பெங்களூருக்கு செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெய் தன்னுடைய முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷும் பெங்களூருக்கு செல்ல இருப்பதால் இருவருமே ஒன்றாக ரயிலில் பயணிக்கின்றார்கள். அப்போது இருவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

- Advertisement -

பின் இருவரும் தங்களுடைய செல் போன் எண்னையும் மாற்றிக் கொள்கிறார்கள். பின் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் மிகவும் கோபக்காரர், அவரை கொடுமை படுத்தி துன்புறுத்துகிறார் என்று ஜெயிக்கு தெரிய வருகிறது. இதனால் வாழ்க்கையை வெறுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்து வருகிறார். இது அனைத்தும் ஜெய்க்கு தெரிய வந்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஆறுதலாக பேசுகிறார்.

இதை நினைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யை மீண்டும் காதலிக்க நினைக்கிறார். மேலும், இருவரும் நன்றாக பழகி வருகிறார்கள். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் ஜெய் குழப்பத்தில் இருக்கிறார். கடைசியில் ஜெய் தன்னுடைய மனைவி இடம் மறைக்கிறார். இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலை ஜெய் எப்படி சமாளித்தார்? தன்னுடைய மனைவியிடம் உண்மையை சொன்னாரா? ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் என்னானது? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

காதல், அன்பு, கோபம், பயம் என அனைத்து உணர்வுகளிலும் ஜெய் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னுடைய முன்னாள் காதலியை சந்தித்த பிறகு ஏற்படும் பிரச்சனைகளை அவர் சமாளிக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. இவரை அடுத்து ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

குறிப்பாக, காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவர் ஜெய்யை விட சிறப்பாக நடித்திருப்பது கைத்தட்டலை கொடுத்திருக்கிறது. மேலும், முன்னாள் காதலியை சந்தித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கும் கதைக்களம் நன்றாக இருக்கிறது. திரைக்கதையில் வித்தியாசம் காட்டி பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார். அதோடு ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்திருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

இடைவெளிக்கு பிறகு வரும் சில காட்சிகள் ஐஸ்வர்யா ராஜேஷ் வில்லிப்போல் காட்ட முயற்சித்து இருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அதை இயக்குனர் சரி செய்து இருக்கிறார்.
சில காட்சிகள் ஏற்கனே படங்களில் பார்த்தது போல நினைவுக்கு வருகிறது. இப்படிதான் அடுத்த காட்சி இருக்கும் என்பதை பார்வையாளர்களால் யூகிக்க முடியும் அளவிற்கு இயக்குனர் எடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தீராக் காதல் அமைந்திருக்கிறது

நிறை:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பாராட்டுக்குரிய ஒன்று

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம்

உணர்வுபூர்வமான காதல் கதையை இயக்குனர் அழகாக சொல்லி இருக்கிறார்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகள் பார்த்தது போலவே இருக்கிறது

யூகிக்க கூடிய அளவிற்கு காட்சிகள் அமைந்திருக்கிறது

மொத்தத்தில் தீராக் காதல் – ஆறாக் காதல்

Advertisement