வெள்ளிகிழமை அதுவுமா இப்படியா.? விஜயகாந்த் வீட்டில் திருடர்கள் கைவரிசை.!அப்செட்டில் விஜயகாந்த்.!

0
233
Captain

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் அவர், தனது வீட்டில் ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.மாடுகள் இரண்டையும் மிகவும் பாசமாக பார்த்துக்கொள்வார் விஜயகாந்த்.

Vijayakanth cow

மேலும் நடிகர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார். மேலும், காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றையும் கட்டிவருகிறார். அந்த வீட்டின் முன்பு கட்டிவைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் வளர்த்து வந்த இரண்டு பசு மாடுகளை நேற்றிரவு(அக்டோபர் 11) மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்

இன்று காலை விஜயகாந்த் வீட்டில் பணிபுரிந்து வந்த காவலர்கள், மாடுகள் காணாமல் போனதை விஜயகாந்த் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் மாடுகள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.

vijayakanth home

வெள்ளிக்கிழமையும் அதுவுமா புதுவீட்டில் இத்தனை கட்டிவைக்கப்பட்டிருந்த பசு மாடுகள் திருடுபோனதாக விஜயகாந்த் குடும்பத்தினர் அப்செட்டில் இருப்பதாக, அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.