பிரபல சின்னத்திரை தம்பதி ராஜ்கமல் – லதா ராவ்வின் பிரம்மாண்ட வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு – என்ன நடந்தது

0
1867
Rajkamal
- Advertisement -

சின்னத்திரை தம்பதி ராஜ்கமல்-லதாவின் பிரம்மாண்ட பங்களாவின் பூட்டை உடைத்து திருட்டு நடந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளித்திரை- சின்னத்திரை இரண்டிலுமே மிகப்பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் ராஜ்கமல்- லதா ராவ். இந்த ஜோடிகள் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பல ஆண்டு காலமாக சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர்கள் இருவரும் காதலித்த நாள் தொடங்கி திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றும் இன்னும் அதே அன்புடனும் பாசத்துடனும் இருக்கிறார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. மேலும், ராஜ்கமல் சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தார். பின் பெரிய அளவில் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட அபியும் நானும் சீரியலில் டிரைவர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ராஜ்-லதா ராவ் திரைப்பயணம்:

இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது. மேலும், இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. அதேபோல் லதா ராவ் வெள்ளித்திரை- சின்னத்திரை இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாவம் கணேசன் சீரியலில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் படங்களில் அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களிலும், வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ராஜ்கமல்- லதா ராவ் யூடியூப் சேனல் :

தற்போது இருவருமே பிசியாக நடித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். இதில் தன் மகள்களோடு சேர்ந்து வீடியோக்கள் எல்லாம் போட்டு வருகிறார்கள். இதில் இவர்கள் போடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டி இருக்கிறார்கள். இந்த வீட்டை பிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜ்கமல்- லதா ராவ் கட்டி முடித்து இருக்கின்றனர். இந்த வீட்டை பிரபலங்கள் சூட்டிங்காக மட்டுமே பார்த்து பார்த்து கட்டி இருப்பதாக கட்டியிருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிரமாண்டமாக கட்டிய ஷூட்டிங் வீடு:

மேலும், இரண்டு பெரிய ஹால், 4 பெட்ரூம், கார் பார்க்கிங், கிச்சன், பூஜை அறை என எல்லாவற்றிலும் பிரம்மாண்டமாக செய்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய ஷூட்டிங் வீடு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிலையில் இவர்களின் பங்களா வீட்டில் நடந்திருக்கும் திருட்டு சம்பவம் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இந்த பங்களாவின் பின்புற கதவின் பூட்டை உடைத்து விலையுயர்ந்த டிவி, மோட்டார் உள்ளிட்ட பல பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கிறார்கள்.

வீட்டில் திருட்டு சம்பவம்:

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ராஜ் கமல் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். தற்போது போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அப்போது அதே தெருவில் வசிக்கும் பாஜக பிரமுகர் பிரபாகரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் திருடு போனது தெரியவந்திருக்கிறது. ஒரே தெருவில் அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement