வடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்.!

0
280
Vadivukarasi

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தேறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வடிவுக்கரசி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 10 ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று, அங்கேயே ஒரு சில தினங்கள் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இவரது வீட்டில் கொள்ளை போன சம்பவத்தை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

கடந்த 18ஆம் தேதி இரவு 10 மணி அளவில் வடிவுக்கரசி குடியிருக்கும் பகுதியில் காவல் காத்து வரும் காவலாளி, வடிவுக்கரசிக்கு போன் செய்து உங்களது வீடு திறந்து இருப்பதாகும், விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வடிவுக்கரசி மற்றும் அவரது மகள் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளனர்

அங்கே பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது உணர்ந்துள்ளனர். இதையடுத்து வடிவுக்கரசி தனது சகோதரர் அறிவழகன் சேர்ந்து தியாகராஜன் நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளனர்.