தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'தெறி' படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 'செல்லாக்குட்டி' என்ற பாடலை பாடியவர் தான் பின்னணி பாடகியான நீதி மோகன்.
https://twitter.com/neetimohan18/status/1098147760212070401
டெல்லியை சேர்ந்த இவர், ஸ்டார் தொலைக்காட்சி, வி தொலைக்காட்சி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் வேலைக்காரன், நானும் ரௌடி தான் போன்ற படங்களிலும்பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக நிஹார் பாண்யா என்பவரை காதலித்து வந்தார்.
https://twitter.com/neetimohan18/status/1098970957065211906
https://twitter.com/neetimohan18/status/1098147760212070401
பின்னர் இருவீட்டார் சம்மதத்துடனும் கடந்த 15ஆம் தேதி இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் என்ன விடயமெனில் இந்த திருமணத்தின் போது நீதி மோகனின் தந்தை உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இருப்பினும் திருமணம் முடிந்து தனது தந்தை உடல்நலம் தேறி வருவதாக நீதி மோகன் தெரிவித்துள்ளார்.





