மாதவனுக்கு நோ சொன்ன இரண்டு முக்கிய நடிகைகள். ஆமா, இவரு ஏன் நோ சொன்னாரு.

0
6674
madhavan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 கால கட்டங்களில் “சாக்லேட் பாயாக” விளங்கியவர் நடிகர் மாதவன். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “அலைபாயுதே” திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். அதுமட்டும் இல்லாமல் பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்றும் சொல்வார்கள். மேலும், இவருடைய சிரிப்பிற்கு என்றே ஒரு தனி கும்பல் சுற்றிக் கொண்டிருக்கின்றது. அதோடு அவருடைய வசீகரமான பேச்சும், சிரிப்பும் தான் அவருடைய நடிப்புக்கு கூடுதல் பலமாக அமைந்தது. மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்த இறுதி சுற்று படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மாதவன் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிகை காஜல் மற்றும் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்க பேசி உள்ளார்கள். ஆனால், அவர்கள் ‘நோ’ என்று பதில் சொல்லியுள்ளார்களாம்.

-விளம்பரம்-
Image result for madhavan rocketry

- Advertisement -

இதனைத்தொடர்ந்து நடிகர் மாதவன் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ” இறுதிச்சுற்று, விக்ரம் வேதா” போன்ற படங்களில் மாஸ் காட்டி உள்ளார். மேலும், தற்போது “ராக்கெட்ரி நம்பியின் விளைவு” என்ற ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், விஞ்ஞானி நம்பி கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை நடிகர் மாதவன் அவர்களே இயக்கி தயாரிக்கப்போகிறார் என்று ஒரு பக்கம் பேசுகிறார்கள். மேலும், இந்த படத்தில் மாதவன் அவர்கள் 75 வயது முதியவராக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

மேலும்,பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு மாதவன்– சிம்ரன் ஜோடி இந்த படத்தில் இணைய உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் உருவாக போவதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நடிகை காஜல் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனை தான் ஒப்பந்தம் செய்ய கேட்டுள்ளார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சொல்லி வைத்த மாதிரி “நோ” என்று சொல்லி இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Image result for Shruthi haasan kajal aggarwal

மேலும் மாதவன் ஒரு ஹேண்ட்சம் ஹீரோ என்பது எல்லோருக்குமே தெரியும் என்றாலும் 75 வயது தாத்தாவாக நடிக்கிறார் என்பதால் இவர்கள் ஜோடியாக நடிப்பதற்கு ஒத்துக்கொள்ள மறுத்திருப்பார்களோ? என்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் காஜல் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால், ஸ்ருதி ஹாசன் ஹாசன் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தான் இருந்து வருகிறார். ஆனால், அவர் ஏன் இந்த படத்தின் வாய்ப்பை மறுத்தார் என்று தான் தெரியவில்லை. மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுபவர் நம்பி நாராயணன். திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைக்கும் விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். மேலும், இவர் பணம் பெற்றுக் கொண்டு ராக்கெட் சம்மந்தமான ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுப்பியுள்ளார்கள்.

இதையும் பாருங்க : மெட்டி ஒலி சீரியல் காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா ? குடும்ப புகைப்படம் இதோ.

இதனால் இவரை 1994 ஆம் ஆண்டு கைது செய்து சிபிஐ போலீசார் விசாரித்து வந்துள்ளார்கள். மேலும், தீவிர விசாரணையில் நம்பி நாராயணன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. பின் இவரை வழக்கிலிருந்து விடுவித்தார்கள். இருந்தாலும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்பி அவர்கள் வழக்கு தொடுத்து உள்ளார். மேலும், இந்த வழக்கு கடந்த 20 வருடங்களாக நடந்து வருகின்றது. இப்படிபட்ட இவருடைய வாழ்க்கையை திரைப்படமாக இயக்க உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement