எங்களை பற்றி தவறாக பேசுகிறார்கள் ,சீரியலில் இருந்து விலகிய காதல் ஜோடி – விபரம் உள்ளே

0
19585
anwar

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக ஜோடியாக நடித்து வருபவர்கள் சமீரா ஷெரீப் மற்றும் அன்வர். இருவரும் பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்து வந்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

sameera

இந்நிலையில் இந்த பகல்நிலவு சீரியல் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விலகல் இந்த தொடரில் இன்னொரு ஜோடிக்கு இந்த ஜோடியின் மீதும் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சமீரா செரிப் கூறியதாவது,

கதையில் எங்களது சீன்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது. இதே சீரியலில் இன்னொரு ஜோடி உள்ளது. அந்த ஜோடிக்கு எங்களை போல வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் நாங்கள் ஏதோ கதையாசிரியரிடம் சென்று எங்களுக்கு முக்கியதத்துவம் கொடுப்பது போல சீன்களை எழுத சொல்லி கேட்டது போல புறம் பேசுகின்றனர்.

anwer

இந்த பேச்சு எங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளோம். இந்த முடிவை கடந்த டிசம்பர் மாதமே எடுத்துவிட்டோம் என கூறினார் சமீரா.