ரெமோ பட விழாவில் சிவா கண்களிங்கிய காரணம் ? தயாரிப்பாளர் ரவீந்திரன் ஓபன் டால்க்.

0
1136
sushant
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து தான் ஒட்டுமொத்த இந்தியாவும் பரபரப்பாக பேசி கொண்டு உள்ளது அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் தூக்கு போட்டு இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் தான் காரணம் என்றும் சமூக வலைதளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.அதே போல சுஷாந்த் மரணத்தில் அவரது தந்தை சுஷாந்தின் முன்னாள் காதலியான  ரியா சக்ரபோர்த்தி உட்பட ஆறு பேர் மீது பீகார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

வாரிசு என்பது அரசியலில் மட்டும் கிடையாது, சினிமாவிலும் அதன் தாக்கம் உள்ளது. பொதுவாகவே பிரபல நட்சத்திரங்கள் சினிமா உலகில் தனக்கு பிறகு தங்கள் பிள்ளைகளையே பெரிய நடிகர்களாக உருமாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த நிலை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவகிறது.மேலும், பல வாரிசு நடிகர்கள் சேர்ந்து தான் சுஷாந்த் சிங்க்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இவ்வாறு செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சி மூலம் தன் பயணத்தை தொடங்கி தற்போது சினிமாவில் பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இப்படி ஒரு நிலையில் சுஷாந்த்துக்கு நடந்தது போல தான் சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது என்று பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஒருவரின் வளர்ச்சியை டார்கெட் செய்கிறார்கள் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். ஒரு நான்கு வருடத்திற்கு முன்னர் சிவகார்த்திகேயன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறார். அது என்னவோ அவருக்கு ஏதோ பணக்கஷ்டம் இருப்பது போல தெரியலாம்.

ஆனால், அவரும் ஸ்ரீசாந்த்தை போல ஒதுக்கப்பட்டார். சிவகார்த்திகேயனுக்கு நடந்தது போல மற்ற எந்த நடிகருக்கும் நடக்கவில்லை அவரது வளர்ச்சி மிகவும் பெரியது தொலைக்காட்சியில் ஒரு அங்கமாக இருந்து ஒரு சூப்பர் ஹீரோவை போல குறைந்த நேரத்தில் அவர் சினிமா துறையில் வளர்ந்து இருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது அவருக்குத்தான் என்னைப் போட்டு செய்தால் அதிக டார்ச்சர் ஏற்பட்டு இருக்கிறது அவர் ஒரு புதிய காரை வாங்கினாலும் இல்லை அவர் எங்காவது சென்றாலும் பலருக்கு அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது அந்த பிரச்சினைதான் ரெமோ படத்தில் விழாவில் வெடித்தது என்று கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement