இப்போ இருக்க காலகட்டத்துல இப்படிபட்ட பொண்ணு தான் வேணும்- பிராசந்தின் இரண்டாம் திருமணம் குறித்து தியாகராஜன்

0
323
- Advertisement -

பிரசாந்தின் இரண்டாம் திருமணம் குறித்து தியாகராஜன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது. பின் இடையில் இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் ‘அந்தகன்’. இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்.

- Advertisement -

அந்தகன் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் பிரசாந்துக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கிறது. இந்நிலையில் அந்தகன் படம் வெற்றியடைந்ததை அடுத்து தியாகராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் பிரசாந்துக்கு திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு, கண்டிப்பாக பிரசாந்த்திற்கு திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கான வேலையில் தான் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கோம். எனக்கு இருக்கிற ஒரே தீராத மனக்கவலை என்றால் பிரசாந்தின் திருமணம் தான்.

தியாகராஜன் பேட்டி:

நான் மட்டும் இல்ல அவருடைய அம்மாவும் அதே கவலையில் தான் இருக்கிறார். தினம் தினம் அவருடைய திருமணத்தை நினைத்து நாங்கள் ரொம்ப வருத்தப்படுகிறோம். பிரசாந்துக்கு ஒரு குடும்ப பாங்கான, அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க நினைக்கிறோம். சோசியலிஸ்ட், வொர்கிங் கேர்ள் என இந்த மாதிரியான பெண்கள் இல்லாமல் பிரசாந்தை நன்றாக பார்த்துக் கொள்ளும் குடும்ப பாங்கான பெண் தான் வேண்டும். அதற்காக தான் மேட்ரிமோனி, தரகர் என எல்லா இடத்திலும் நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம்.

-விளம்பரம்-

பிரசாந்த் திருமணம் குறித்து சொன்னது:

பார்க்கும் பெண்கள் எல்லாமே சோசியலிஸ்ட் ஆகவும், ஃபாரின் ரிட்டன், ஐ வாண்ட் திஸ், ஐ வாண்ட் தட், போட்டிங் போனும் என்று நிறைய சொல்கிறார்கள். 1008 கண்டிஷன் போடுகிறார்கள். ஆனால், எங்களுக்கு தேவை பிரசாந்த்தை கவனித்துக் கொள்ளும் பெண் தான். இப்போது நான் என்னுடைய படத்தை இயக்குவதை விட்டு பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைக்கும் வேலையில் தான் இறங்கியிருக்கிறேன். கண்டிப்பாக கூடிய விரைவில் பிரசாந்த்திற்கு திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் பிரசாந்த் திருமணம்:

ஏற்கனவே அந்தகன் படத்திற்கான பிரமோஷனில் பிரசாந்த், எனக்கு திருமணம் கண்டிப்பாக நடக்கும். திருமணத்திற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசாந்துக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆகி சில நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரசாந்த் மற்றும் அவரின் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். தற்போது 51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை முடிவு செய்துள்ளார்.

Advertisement