ரஜினியின் ‘தர்பார்’ பட போஸ்டரில் இந்த விஷயத்தை எல்லாம் கவனிசீங்களா.!

0
1387
Darbar
- Advertisement -

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று(ஏப்ரில் 9 ) காலை வெளியாக இருந்தது. இந்த படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீங்கள் கவனிக்கத் தவறிய சில விஷயங்களை தற்போது காணலாம்.

- Advertisement -
  • இந்தப் போஸ்டரில் ரஜினியின் பின்புறத்தில் ஐ பி எஸ் என்ற போலீஸ் பேட்சும் போலீஸ் தொப்பியும் ,போலீஸ் பெல்ட்டும் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
  • அதேபோல இந்த போஸ்டரில் வலதுபுறம் மும்பை என்ற வார்த்தை தலைகீழாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படத்தின் கதை மும்பையை சுற்றியுள்ள பகுதியில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
  • ரஜினியின் பின்புறத்தில் சில வரைபடங்களும் உள்ளது. அதில் சில குறியீடுகளும் உள்ளது. எனவே, குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் சம்பவத்தை ஒரு போலீஸ் அதிகாரியாக ரஜினி எவ்வாறு கையாளுகிறார் என்பதுகூட கதையாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
  • மேலும் ரஜினியின் வலதுபுறத்தில் you decide whether you want me to be good bad or worst என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ‘நீ முடிவெடுத்துக்கொள் நான் நல்லவனாக இருக்க வேண்டுமா கெட்டவனாக இருக்க வேண்டுமா இல்லை மோசமாக இருக்க வேண்டுமா’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த வாசகம் படத்தில் பஞ்ச் டயலாக்காக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதேபோல இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியின் லுக்கில் இல்லாமல் தாடியுடன் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். எனவே, ஒரு போலீஸ் அதிகாரி தன் வேலையை இழந்து பின்னர் எப்படி எதிரிகளை பழி வாங்குவார் என்பதுகூட கதையாக இருக்கலாம்.
Advertisement