புகைப்படத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இந்த மாநிலத்தின் முதல்வர்னு சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

0
2616
Hemant-Soren
- Advertisement -

எட்டு ஆண்டுகளில் ஜார்கண்டின் முதலமைச்சர் ஆன ஹேமந்த் சோரன் யார்? அவரின் அரசியல் பயணத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். ஹேமந்த் சோரன் அவர்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும், 3 முறை முதலமைச்சராக இருந்த சிபு சோரன் என்பவரின் மகனும் ஆவார். ஹேமந்த் சோரன் அவர்கள் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர். ஹேமந்த் சோரன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் கூறினார்கள். ஆனால், இவர் தான் பள்ளிப் படிப்பு மட்டும் தான் படித்து உள்ளேன் என்று வேட்பு மனுவில் குறிப்பிட்து இருந்தார். மேலும், இவர் 2005 ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலில் ஹேமந்த் தோற்கடிக்கப்பட்டார். பின் இவருடைய மூத்த சகோதரர் துர்கா இறந்து விட்டார். துர்கா மறைவையடுத்து ஹேமந்த் 2009 ஆம் ஆண்டு கட்சியின் பிரபலமான வேட்பாளராக உருவெடுத்தார்.

-விளம்பரம்-
 hemant soren

- Advertisement -

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஹேமந்த் இருந்தார். பின் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பாஜக தலைமையிலான கூட்டணி அரசியலில் துணை முதலமைச்சர் ஆனார். மேலும், ஹேமந்த் அவர்கள் மாநிலத்தின் முதலமைச்சராக 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் வரை இருந்தார். பின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் ஆனார். தற்போது இவர் ஜார்கண்ட்டின் முதல்வராக வரும் 29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவிற்காக தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வருகிறார்கள். ஜார்க்கண்டில் சட்டசபை பொதுத் தேர்தல் ஐந்து கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக கட்சி முதல் முறையாக தனித்துப் போட்டியிட்டது.

இதையும் பாருங்க : சித்தி 2 தொடருக்காக திருமணம் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம். யார் தெரியுமா ?

பாஜக கட்சிக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. மேலும், தேர்தல் போராட்டத்தில் இவருடைய நடவடிக்கைகள் எல்லாம் அதிரடியாக இருந்தது. அது என்னவென்றால் மது விற்பனை அதிகரிப்புக்கு எதிர்ப்பு, அரசு பள்ளிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் கோரி 70 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்துக்கான ஆதரவு என பல விஷயங்களை செய்தார். இதனால் ஹேமந்த்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெறுகின்றார்.

-விளம்பரம்-
  hemant soren

இறுதியில் தேர்தல் முடிவில் ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலுமாக இந்த கூட்டணி மொத்தம் 47 தொகுதிகளை வென்றன. மெஜாரிட்டிக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால், 47 இடங்களை வென்றதால் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தான் ஜார்கண்டின் முதலமைச்சர் ஆகிறார். அதோடு ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைகிறது. தற்போது கவர்னர் திரவுபதி முர்மு அவர்கள் ஹேமந்த் சோரன் அவர்களை ஆட்சி அமைக்க உரிமையையும் அளித்தார். இதையடுத்து வருகிற 29-ஆம் தேதி பகல் ஒரு மணி அளவில் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

Advertisement