அஜித்துடன் நடித்த இளம் நடிகர் மூன்றாவது ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் !

0
1763
kamal

‘துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பிக் பாஸ்’ இது தான் தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் மனதில் ஓடி கொண்டிருக்கு ஒரு மிக பெரிய விடயமாக இருந்து வருகிறது என்று கூறலாம். இன்று (ஜூன் 17) விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் பட்டியல் வரிசையாக கிடைக்கப்பெற்று வருகின்றது.

mahat

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சின் முதல் போட்டியாளராக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா அனந்த் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

mahat

-விளம்பரம்-

அவரை தொடர்ந்து பழம் பெரும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் என்னும் கபாலி பிக் பாஸ் வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார். இவரை தொடர்ந்து இளம் நடிகர் ராகவேந்திரா மஹத் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மூன்றாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டர்.

mahat

நடிகர் ராகவேந்திரா மஹத், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன் பின்னர் விஜய் நடித்த ‘ஜில்லா’ இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28 – பாகம் 2 ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement