‘போதைல வந்து ஸ்க்ரீன கிழிக்கறது’ – ஸ்க்ரீனை கிழித்த தனுஷ் ரசிகர்கள் – ரோஹிணி திரையரங்கம் பதிலடி.

0
516
Thiruchitrambalam
- Advertisement -

சமீபத்தில் வெளியான தனுஷ்ஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியின் போது ரசிகர்கள் சிலர் திரையரங்கின் ஸ்க்ரீனை கிழித்த வீடியோ பெரும் வைரலானது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இறுதியாக இவர் நடித்த ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அதோடு மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த தி கிரே மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய படம் தான் தி கிரே மேன். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

தி கிரே மேன் படம்:

கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர்.

-விளம்பரம்-

திரையை கிழித்த ரசிகர்கள் :

நீண்ட நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த படம் நேற்று வெளியாக இருக்கிறது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு தனுஷ் சென்னை ரோகிணி தியேட்டருக்கு நேற்று காலை வந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலர் உற்சாகமிகுதியில் திரைக்கு மேல் ஏறி ஆடினர். அப்போது ஸ்க்ரீன் மீது சிலர் விழுந்து சேதமடைந்தது.

ரோகினி சினிமாஸ் Retweet :

இப்படி ஒரு நிலையில் இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் வாசி ஒருவர் ‘இப்படி ஸ்கிரீன கிழிச்சா அடுத்த ஷோ படம் பார்க்க வர ரசிகன் எப்புடி டா படம் பார்ப்பான்..?? இவனுங்க அறை போதைல வந்து ஸ்க்ரீன கிழிக்கறது, சீட் ல பிளேடு போட்டுட்டு போயிடுறது அப்பறம் தியேட்டர் மெயின்டனஸ் சரியில்லைனு பொலம்பவேண்டியது’ என்று பதிவிட, அதனை ரோகினி சினிமா Re Tweet செய்துள்ளது.

Advertisement