பொதுவாகவே ரசிகர்கள் சினிமா முதல் சின்னத்திரை பிரபலங்களை குறித்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும் அதை சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருவார்கள். அதிலும் பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் கொண்டாட்டம் என எந்த விசேஷம் நடந்தாலும் ரசிகர்களும், நெட்டிசன்களும் அதை சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரல் ஆக்கி விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது சீரியல் பிரபலங்களளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. அது வேற யாரும் இல்லை சீரியல் பிரபலங்களான அபி நவ்யா மற்றும் தீபக் தான். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும், இந்த நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.
இதையும் பாருங்க : ‘வாழ்கை ஒரு வட்டம்’ மாஸ்டர் படத்தின் போது அரவிந்த் சாமி செய்த ட்வீட் – வங்கம் வச்சி செய்யும் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறர்கள். மேலும், இவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த திருமணம் என்ற சீரியலில் நடித்து உள்ளார்கள். பின் இவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் ரசிகர்களும் அபிநவ்யா மற்றும் தீபக் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களின் நிச்சயதார்த்த வீடியோ மற்றும் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள். ஏற்கனவே திருமணம் சீரியலில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் தற்போது ரியல் லைப் பேராக இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.