‘வாழ்கை ஒரு வட்டம்’ மாஸ்டர் படத்தின் போது அரவிந்த் சாமி செய்த ட்வீட் – வங்கம் வச்சி செய்யும் விஜய் ரசிகர்கள்.

0
28390
aravind
- Advertisement -

நாளை தலைவி படம் வெளியாக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் அரவிந்த்சாமியை சமூக வலைதளத்தில் வச்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது.

-விளம்பரம்-

ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரியஸாக எடுத்து வெளியிட்டார் இயக்குனர் கௌதம் மேனன். இப்படி ஒரு நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாகி இருக்கிறது.

இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது ஜனநாதன் விட்டு சென்ற கடைசி படம் ‘லாபம் ‘ – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

ஏ எல் விஜய் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம் ஜி ஆர் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் ரெப்பட்ட மோதல் முதல் ஜெயலலிதா இறந்தது வரை படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரீ ஷோவை படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்தார் அரவிந்த் சாமி வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் அரவிந்த் சாமி மாஸ்க் கூட அணியாமல் இருப்பதை ஒருபுறம் கலாய்த்தாலும், அரவிந்த் சாமி கடந்த ஜனவரி மாதம் செய்த ட்வீட் ஒன்றை வைத்து தற்போது விஜய் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் போது திரையரங்குகளில் முதலில் 100 சதவீத அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், கொரோனா தாக்கம் அதிகமானதால் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்கள் மட்டும் அனுமதி என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் சில நாட்கள் கழித்து திரையரங்குகல் 100% பார்வையாளர்களுடன் இயங்க அராசானை வெளியாகி இருந்தது. அதில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாகவும் இதனால் திரையரங்குகளில் கொடுக்கப்பட்டு இருந்த 50 % இருக்கை அனுமதியை 100%மாக மாற்ற கோரி திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொண்டதன்படி, ஏற்கனவே 50 % மாக இருந்த தியேட்டர் அனுமதி இனிமேல் 100% இருக்கையுடன் இயங்கலாம் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பால் திரையுலகினர் மட்டுமல்லாது மாஸ்டர் படத்தை எதிர்நோக்கி காத்திருந்த விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.நடிகர் அரவிந்த் சாமி ‘ “50 சதவிகிதம் என்பது சில நேரங்களில் 100 சதவிகிதத்தை விட சிறப்பாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று” என ட்வீட் செய்து இருந்தார். அரவிந்த் சாமியின் இந்தப் பதிவைக் கண்டு அதிருப்தியடைந்த விஜய் ரசிகர்கள், நடிகர் அரவிந்த் சாமியை காட்டமாக விமர்சித்து வந்தனர். தற்போது அரவிந்த் சாமி படம் வெளியாகி இருக்கும் நிலையில் இதை வஞ்சம் வைத்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து கர்மா ஈஸ் ஏ பூமராங், வாழ்க்கை ஒரு வட்டம் என்றெல்லாம் பஞ்ச் வசனம் பேசி அரவிந்த் சாமியை கலாய்த்து வருகின்றனர்.  

Advertisement