பிகில் வில்லனுடன் விஜய்யின் மாஸ் வசனத்தை பேசி அசத்திய திருமணம் சீரியல் நடிகர்.

0
766
siddhu
- Advertisement -

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அதிலும் பல பேருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. சோசியல் மீடியாவில் செய்யப்படும் டப்ஸ்மாஷ் வீடியோ, டான்ஸ் போன்ற பல வீடியோக்கள் மூலம் தான் அவர்களுக்குப் படங்களிலும், தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் டப்ஸ்மாஷ் வீடியோ மூலம் பிரபலமடைந்து சின்னத்திரை சீரியலில் நடித்து கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சித்து. இவர் முதலில் நிறைய டப்ஸ்மாஷ் வீடியோகளை செய்து இருந்தார். இதன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

Hope you all like it 🔥

A post shared by Sidhu (@sidhu_actor_official) on

மேலும், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் தான் இவருக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் திருமணம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சித்து நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். இவர் தற்போது திருமணம் என்ற சீரியலில் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

திருமணம் சீரியலில் சித்து, ஸ்ரேயாவை பார்க்க ஒரு கும்பலே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த சீரியல் வீடியோக்கள் தான் அதிகம் என்று சொல்லலாம். இவர் நிறைய ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சிந்துவின் டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக நடிகர்கள் எல்லோரும் அவரவருக்கு பிடித்த வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சித்து அவர்கள் மீண்டும் தன்னுடைய டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சீரியலில் நடிக்கத் தொடங்கிய உடன் இவர் டப்ஸ்மாஷ் செய்வதை நிறுத்தி இருந்தார். தற்போது வீட்டில் இருப்பதால் தளபதி விஜயின் பிகில் படத்தின் ஒரு காட்சியை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement