அந்த கிஸ் வீடியோ உங்களுக்கு தான்- ரசிகர்களை குஷியில் அழுத்திய சித்து ஸ்ரேயா.

0
3157
thirumanam
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
https://www.facebook.com/watch/?v=410132692909336

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

View this post on Instagram

Short video with cheeku ❤️? hope u all enjoy it ?

A post shared by Sidhu (@sidhu_actor_official) on

இது வெள்ளித் திரைக்கு மற்றும் இன்றி சின்னத் திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல சீரியல் நடிகரும், நடிகையும் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘திருமணம்’. இதில் ஹீரோ – ஹீரோயினாக சித்து – ஸ்ரேயா அஞ்சன் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தமிழ் சீரியல் வரலாற்றிலையே முதன் முறையாக இந்த ஜோடி தான் லிப் லாக் காட்சியில் நடித்து பெரிய பரபரப்பை கிளப்பியது. இவர்கள் ரியல் லைஃபிலும் லவ்வர்ஸ் என கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது, லாக் டவுன் என்பதால் சித்துவும், ஸ்ரேயா அஞ்சனும் அவர்களின் வீட்டில் இருந்தபடியே ஒரு வீடியோ பதிவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், ஸ்ரேயா அஞ்சன் தேநீர் அருந்திக் கொண்டே சித்துவிற்கு முத்தங்களை பறக்க விடுகிறார். அதை சித்து செமையாக கேட்ச் செய்கிறார்.

இவ்வீடியோ தொடர்பாக நடிகர் சித்து பேசுகையில் “சீரியல் ஜோடியான எங்கள ரியல் லைஃபிலும் சேர்த்து பார்க்கணும்னு ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனா, இப்போ கொரோனாவால் ரசிகர்கள் டிவில எங்கள பார்க்க முடியாம ரொம்பவே மிஸ் பண்றாங்க. அதான் இந்த வீடியோவ நானும், ஸ்ரேயா அஞ்சனும் சேர்ந்து பண்ணோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement