தற்போது சின்னதிரையில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளும் சரி, சீரியல்களும் சரி ஏதோ கடமைக்கு எடுப்பது போன்றும் மக்கள் வெறுக்கத்தக்க வகையில் மோசமான கதைகலத்தையும் தான் கொண்டுள்ளது.மேலும் தற்போது உள்ள சின்னத்திரை தொடர்கள் அனைத்தும் அதிகபட்சமாக ஓர் இரு ஆண்டுகள் ஓடினாள் பெரிய விஷயம்.
ஆனால் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பி பார்த்தால் ஒரு சில நாடகங்கள் 5,6 ஆண்டுகள் கூட ஓடி இருக்கிறது. அப்போது வந்த சீரியல்களில் கோலங்கள், மெட்டி ஒளி, அரசி, செல்வி போன்ற பல்வேறு சீரியல்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம்பெற்றுள்ளது. அதே போன்று 2007 இல் வெளியான திருமதி செல்வம் என்ற சீரியல் ஒரு நல்ல குடும்ப சீரியளாக அங்கீகாரம் பெற்றது.
இதில் செல்வம் என்ற முக்கிய கதாபாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சஞ்சீவ்.நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் வாய்ப்பு குறைந்த இவருக்கு ஒரு நல்ல திரூப்பமாக அமைந்தது தான் திருமதி செல்வம் என்ற நாடகம்.
சுமார் 7 வருடங்களுக்கு வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் முதலில் நடிக்கவிறந்தது நடிகர் போஸ் வெங்கட் தான்.இவர் ஏற்கன்வே அதே தொலைக்கட்சியில் ஒலிபரப்பாகிய மெட்டி ஒலி என்ற சீரியலில் நடித்திருந்தார். ஆனால் திருமதி செல்வம் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த போது போஸ் வெங்கட் சினிமாவில் பிஸியாக நடித்து வந்ததால் திருமதி செல்வம் சீரியலில் இவரால் நடிக்க முடியவில்லை.