விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நடிகை மீனாவை காதலித்தாரா? உண்மையை போட்டு உடைத்த திருமாவளவன் – வைரலாகும் வீடியோ

0
1015
thirumavalavan
- Advertisement -

பிரபல நடிகையை காதலித்து தோல்வி அடைந்ததால் தான் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன். இவர் தலித்துகள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் பணியாற்றி வருகிறார். தலித் சிறுத்தைகள் எனும் தலித் இயக்கத்தின் பிரிவை உருவாக்கியவர் மலைச்சாமி.

-விளம்பரம்-

இவர் கொலை செய்யப்படுகிறார். அப்போது மதுரை தடய அறிவியல் துறையில் தொல் திருமாவளவன் பணியாற்றிக்கொண்டிருந்தார். பின் மதுரையில் மலைசாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அப்போதுதான் இவர் தலித் அமைப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் என பெயர் மாற்றம் செய்து தலைவரானார். அன்று தொடங்கி இன்று வரை இவர் அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

திருமாவளவன் காதலித்த நடிகை:

சொல்லப்போனால், இவர் இன்னும் திருமணம் கூட செய்துகொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகையை திருமாவளவன் காதலித்தார் என்றும், அவருடைய காதல் தோல்வி அடைந்ததால் தான் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் ஒரு வதந்தி ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக திருமாவளவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஒரு நடிகையை காதலித்தேன் என்று வதந்திகள் வந்தது.

மீனா குறித்து திருமாவளவன் கூறியது:

என்னிடமும் நிறைய பேர் சொன்னார்கள். அவருடைய பெயர் நடிகை மீனா. அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. அவருடைய ஒரே ஒரு படத்தில் மட்டும் நான் பார்த்திருக்கிறேன். முரளி, மீனா நடித்திருந்த பொற்காலம் படம். அந்த படத்தில் வரும் தஞ்சாவூர் மண்ணை எடுத்து பாடலின் போது மீனாவை பார்த்திருந்தேன். நான் அவரை நேரில் சந்தித்து பேசியது கிடையாது. ஆனால், அவரை நான் காதலிப்பதாக வதந்தி கிளம்பி இருந்தது. அந்த முற்றிலும் பொய் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மீனா திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து இருக்கிறார்.

மீனா கணவர் இறப்பு:

இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மீனாவுடைய கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிர் இழந்தார். இவருடைய இழப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். தற்போது தான் மீனா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கணவன் இழப்பில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement