சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து காயதிரி ரகுமான் தர்க்காலிகமாக நீக்கப்பட்டதாக நிலையில் தற்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முழுவதுமாக பாஜகவை விட்டு வெளியேறுள்ளார் காயத்ரி ரகுராம். இப்படடிப்பட்ட நிலையில் விடுதலை காட்சிகள் தலைவர் திருமாவளவன் இவருக்கு ஆதரவளித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார்.
பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாட்டில் மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து வந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
இவர் பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி துறையின் தலைவராக இருந்தாலும் காசி தமிழ் சங்கம் உட்பட பல நிகழ்ச்சிகளில் இவரை பாஜக ஒதுக்குவதாக குற்றம் சாட்டி வந்தார். அதோடு தங்கள் கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. மேலும் சமீபத்தில் நடந்த சூர்யா மற்றும் டெய்ஸி ஆபாச சர்ச்சை விவகாரம் பற்றி காயதிரி ரகுராம் போட்டிருந்த பதிவினால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்த நிகழ்வுக்கு பின்னர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தார் காயதிரி ரகுராம். மேலும் துபாய் ஹோட்டலில் என்னை 150 பேருக்கு மத்தியில் அசிங்கப்படுத்தியதற்கு பாஜக தலைவர் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தார் காயதிரி. மேலும் அண்ணாமலை குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காயத்ரி ரகுராம் ”அண்ணாமலை ஒரு வார் ரூம் நடத்தி வருகிறார். அங்கு நான் பிக் பாஸில் இருக்கும்போது என்னயுடைய குணத்தை வைத்து விமர்சித்தர் என்ற பல குற்ற சாட்டுகளை கூறி வந்தார் காயதிரி ரகுராம்.
இந்த நிலையில் தான் தற்போது பாஜகவை விட்டு விலகுவதாக நேற்று காயதிரி ரகுராம் அறிவித்திருந்தார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை பாஜக தலைவர் அண்ணாமலை அவமான படுத்தியதாகவும், அதிமுக, விசிக என என்ற கட்சிகள் தன்னை அழைத்தாலும் அவர்களுடன் இணைத்து பணிபுரிய தயார் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் விசிக தலைவரான திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காயதிரி ரகுராமை டேக் செய்து `பாஜக பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என ‘வால் பிராணன் தலைக்கு ஏற’ கத்திக்கொண்டே தானே இருக்கிறோம். இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக என்று காயதிரி ரகுராமிற்கு ஆதரவளிக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.