கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நாங்குநேரி சம்பவம் தான். ஜாதி வெறியால் மாணவன் ஒருவர் வெட்டப்படட்ட சம்பவம் தமிழ் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித்தும் இயக்குனர் மாரி செல்வராஜ் போன்றவர்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கண்டங்களை தெரிவித்து இருந்தனர். கமல் நடித்த
இந்த நிலையில் இது போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் சினிமாவும் ஒரு காரணம் என்று இயக்குனர் முத்தையா, ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களை கடுமையாக சாடி இருந்தார் நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ் வி சேகர். இதுகுறித்து பேசிய அவர்’ சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால், நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவனது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டி இருக்கிறார்கள். சாதியை ஒழிக்கணும் என்று பேசுறோம். ஆனால், பள்ளிக்கூடத்தில் குழந்தையை சேர்க்க போகும் போது என்ன சாதி என்று கேட்கிறார்கள். சின்ன வயதில் அந்தக் குழந்தைக்கு சாதின்னா என்னனு தெரிய தொடங்குது. இதைவிட முக்கியமான காரணம் சினிமா.
சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால் தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையா தான். ‘கொம்பன்’ படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர் தான். அப்புறம் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குனர்கள் அதை தொடர்கிறார்கள். தன் சாதியை உயர்த்துவது தப்பு இல்லை. ஆனால், அடுத்த சாதியை தாழ்த்திக் காட்டுவது தான் தப்பு. இன்று சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுப்பாங்களா? என்று கோபத்தில் கொந்தளித்து பேசி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனிடன் இதுகுறித்து கேள்வி இழப்பப்பட்ட போது இதுகுறித்து பேசிய அவர் ‘இந்த சுழலில் ஒரு திரைப்படம் மட்டுமே காரணம் என்று சொல்லுவது ஒட்டு மொத்தமாக திசை திருப்புதாக இருக்கிறது. மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித் இவர்களால் தான் இது போன்று நடைபெறுகிறது என்பது ஒரு அபத்தமான வாதம் ஒரு குதற்க்கமான வாதம். இது போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகள் நடப்பதை பற்றி கூறுகையில் வன்முறை என்பது காலம் காலமாக நடைபெற்று தான் வருகிறது சமீப காலமாக இவை ஊடகங்களில் இவை அதிகம் இடம் பெற்று வருகின்றன.
இது குறித்து பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருவதற்க்கான காரணம் குறித்து கேட்ட போது அதற்க்கு சாதியவாத அமைப்புகளும் மதவாத அமைப்புகளும் பள்ளி மாணவர்களின் உள்ளத்தில் இது போன்ற நஞ்சு கருத்தை பரப்புகின்றன. பள்ளிகளில் மாணவர்களின் கையில் சாதிய அடையாள கையுரும் அவர் களின் சைக்கில்களில் சாதிய அடையாளத்தை வரைவது இரு சக்கர வண்டிகளில் சாதிய முத்திரைய பதிப்பது இது போன்ற செயல் பாடுகளில் சாதியவாத அமைப்புகளும் மதவாத அமைப்புகளும் தொடர் பிரச்சாரங்களை செய்து வருவதால் இது போன்ற நாங்குநேரி சம்பவங்கள் நடைபெறுகின்றன.இது குறித்து ஆய்வு மேற்கோள்வதற்காக முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஏற்கனவே எஸ் வி சேகரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பா ரஞ்சித் ‘அந்த மாணவனை வெட்டிய அந்த சிறுவர்கள் பாவம் என்றும் சிறுவர்களிடம் அவருக்கு ஒன்றும் தெரியாது, அருவவை கொடுத்து வெட்ட சொல்லி இருக்கிறார்கள். நான் என்னுடைய படைப்புகள் மூலம் தான் அதை சரிசெய்ய முடியும். நீ இந்த படைப்புகளை மாற்ற கூடாது என்று சொன்னால் நான் அதை பத்தி கவலை படமாட்டேன்.
நான் எப்படி பேச வேண்டும் என்று நீ யார் அதை முடிவு செய்ய? இன்னும் எத்தனை காலம் நீ என்னுடைய குரலாக இருப்பேன் என்று என்னை ஏமாற்றி கொண்டு இருக்க போகிறாய்? இது என்னுடைய குரல் எனக்கு வலிக்கிறது நான் தான் பேசமுடியும். என்னுடைய பிரச்சனைகளை பற்றி பேசினால் பேச கூடாது என்று சொல்ல நீ யார் ? நான் அவ்வாறு பேசினால் உனக்கு கோபம் வருதுனா நீதான் முதல் குற்றவாளி. நீ உன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு உன் குற்றத்தை சரி செய்துகொள். உன்னால் ஒரு படைப்பை ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் உன்னை இவ்ளோ காலம் அப்படியே வைத்து இருந்தது? அதனால தான் நீ தற்போது வெடிக்கிறாய். நீ எப்படி பட்ட மன நிலையில் இருக்கிறாய் என்று பார்த்துகொள்.” என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.