ஸ்டெர்லைட்டுக்கு கருத்து சொன்ன ரஜினி காவிரிக்கு சொல்லாது ஏன்? – திருமுருகன் காந்தி ஆவேசம்

0
1503
- Advertisement -

ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார் என்று திருமுருகன் காந்தி கூறியிருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சியோன் ராஜா எழுதி இயக்கி இருக்கும் படம் தான் சமூக விரோதி. இவர் ஏற்கனவே பொது நலன் கருதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த சமூக விரோதி படத்தை ஜியோனா பிலிம் பேக்டரி தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு மாலக்கி இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிஜு மோன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தில் பிரஜின், நாஞ்சில் சம்பத், வனிதா விஜயகுமார், கஞ்சா கருப்பு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தைச்
சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் கூறியது:

அப்போது விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் கூறி இருந்தது, சினிமாவும் அரசியலும் சம்பந்தம் இல்லை என்பதை சொல்ல வேண்டாம். சினிமாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. சினிமா ஒரு புகழ் பெற்ற ஊடகம். 1923ல் காட்பாதர் படத்தில் நடித்த நடிகர் மார்லன் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியிருந்தார். அந்த விருது விழாவில் அவர் விருதை வாங்காமல் ஒரு செவ்விந்திய பெண்ணை வைத்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி பேசி இருந்தார். அந்த பூர்வீக குடிகளின் ஒடுக்குமுறையை பற்றி கவலைப்பட்டு தான் அந்த விருதை வாங்க மறுத்ததாக கூறியிருந்தார்.

ரஜினி குறித்து சொன்னது:

சர்வாதிகாரி ஹிட்லரை பார்த்து உலகமே பயந்து கொண்டிருந்தபோது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவையாக உருவாக்கி அவர் மீது இருந்த எண்ணத்தை சார்லி சாப்ளின் உடைத்திருந்தார். இப்படி சினிமா கலைஞர்கள் தான் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினி மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கவே இல்லை என்று பலரும் சொல்லும்போது அவர் பதில் கொடுத்திருக்கலாம். அது ஒரு மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால், சம்பந்தமில்லாத பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்து அதை திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களை தவறான பாதையில் செல்ல வழிவகுக்கிறார்.

-விளம்பரம்-

ரஜினியை விமர்சிக்க காரணம்:

அவர் ஒரு பெரிய ஹீரோ. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரவாதிகள் புகழ்ந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது. எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படி பேசும்போது கோபம் வர தான் செய்யும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், உத்தர பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில் விழும்போது நாங்கள் கேள்வி கேட்க தான் செய்வோம். சமூகவிரோதி காலில் ரஜினி விழும் போது அதை நாங்கள் கேள்வி கேட்போம். சமூகவிரோதியை அவர் ஆதரிப்பதாகவே நாங்கள் எடுத்துக் கொள்வோம் பல விஷயங்களை பேசி இருந்தார்.

ரஜினி – ஆதித்யநாத் சர்ச்சை:

நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் ரிலீஸ் போது ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன் என்று பேட்டியில் சொல்லி இருந்தார். பின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட் பதிவிட்டு இருந்தார்கள். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement