சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், துணை நடிகர்களாக இருக்கும் எத்தனையோ, மக்களுக்கு பரிட்சயமான நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. அந்த வகையில் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் பெஞ்சமின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சேரன்.
அதிலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலுவை இவர் திட்டி தீர்த்து துபாயம் துபாய் என்று பேசிய வசனம் இன்றளவும் பேமஸ் தான். 40க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தனக்கு இறுதியை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் மக்களிடம் உதவி கேட்டு வீடியோ ஒன்றைதற்போது சிகிச்சை பெற்று நலம்பெற்றுள்ளார் பெஞ்சமின்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பெஞ்சமின் பேசுகையில், எனக்கு ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு லட்சமும் சமுத்திரக்கனி அண்ணன் 50 ஆயிரமும் கொடுத்து உதவினார்கள். மக்களை பொறுத்த வரை சினிமா நடிகர்களை பற்றி தவறான கருத்து இருக்கிறது. விஜய், அஜித்துடன் நடித்தாலே நிறைய பணம் சம்பாத்திருப்போம் என்று நினைக்கிறார்கள். அந்தப் படத்தில் எங்களுக்குத் தினசரி ஊதியம்தான். அது, 1,000 அல்லது 1,500 என சொற்பமாகத்தான் இருக்கும். என்னை மாதிரி எத்தனையோ ஆயிரக்கணக்கான நடிகர்கள் இதேபோல கஷ்டப்படுகிறார்கள்.
சினிமாக்காரன் என்றால் குடிச்சுட்டுக் கும்மாளம் போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படி இல்லை. விஜய், அஜித்திற்கு என் நிலைமை தெரியாது. தெரிந்திருந்தால் அவர்களே தனியாளாக உதவி செய்திருப்பார்கள்.’திருப்பாச்சி’ படம் மூலம்தான் நான் வெளியே தெரிய ஆரம்பித்தேன். அதற்காக நடிகர் விஜய்க்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் பெஞ்சமின்