தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். தல அஜித்துடன் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தல அஜித் குறித்து பல பிரபலங்கள் பேட்டியில் கூறியுள்ளார். கடந்த வருடம் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது தல அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக வலிமை படம் உருவாகி வருகிறது.
இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும், தல அஜித் நடித்த மங்காத்தா படத்தில் ஜெய் அவர்கள் நடிப்பதாக இருந்தது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ஜெய். நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் “மங்காத்தா” படம் ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவே அமைந்தது என்றே கூறலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் வித்யாசமான ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்.
இந்நிலையில் நடிகர் ஜெய் அவர்கள் பேட்டியில் கூறியிருப்பது, மங்காத்தாவில் நான் ஒரு போலீஸ் கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். அஜித் சார் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன்னாடியே அதில் ஐந்து ஹீரோக்கள் நடிப்பதாக இருந்தது. அதில் நானும் ஒருவனாக இருந்தேன். நான்கு ஹீரோக்கள் ரெடி ஓகே என்று சொன்னார்கள்.
அப்புறம் ஐந்தாவது ஹீரோவாக அஜித் சார் தான் இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது. அஜித் சார் வந்தவுடனே மங்காத்தாவில் போலீஸ் அதிகாரியாக அவர் தான் நடித்தார் என்று கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜெய் திகழ்ந்து வருகிறார். இவர் முதன் முதலில் விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவரது தம்பியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். பகவதி படத்திற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.