நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரபல நடிகர் ..! – யார் தெரியுமா..?

0
1190
nayan

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் “கோலமாவு கோகிலா” லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது.
Nayanthara Actress

“கல்யாண வயசு” என்ற அந்த பாடலில் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொல்வது போல காட்சி அமைக்கபட்டிருந்தது. வெளியான சில நாட்களிலேயே அந்த பாடல் யூடியூபில் படு ட்ரேடண்டாகியது. மேலும் இந்த பாடலில் நடித்துள்ள யோகி பாபுவிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் தமிழில் “சதுரங்க வேட்டை ” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் நட்டி நடராஜன் இந்த பாடலை குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளரான இவர் தமிழ் ,இந்தி , மலையாளம் போன்ற மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார். 2002 விஜய் நடிப்பில் தமிழில் வெளியான “யூத் ” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் “கோலமாவு கோகிலா” படத்தில் வரும் கல்யாண வாயசு பாடலை கண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவை வாழ்த்தியுள்ளார். மேலும் அந்த பதிவில் கோலமாவு கோகிலாவாக நடித்திருக்கும் நயன்தாராவை குறிப்பிட்டு “கட்டுனா கோலமாவு கோகிலாவ கட்டணும் இல்லை கட்டியவனுக்கு கை கொடுக்கனும் ‘என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.