தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்களிடை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. நடிகர் சூர்யா அவர்கள் நடிகை ஜோதிகா உடன் அவர்கள் நடிகர் சூர்யாவுடன் 7 படத்திற்கு மேல் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார். பின் அவர்கள் இருவரும் காதலித்து 2006 ஆம் அவர்கள் செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமா உலகில் இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.
தற்போது இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்களின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் சூர்யா அவர்களின் கையில் தன்னுடைய மனைவி ஜோதிகா பெயரையும், தன்னுடைய குழந்தைகள் தியா, தேவ் பெயரையும் எழுதியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட ஜோதிகா அவர்கள் தன்னுடைய கணவர் சூர்யா பற்றியும் குழந்தைகள் பற்றியும் பெருமிதமாக பேசிருந்தார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை துவங்கிய ஜோதிகா பெண்களுக்கு வலிமையான கதை கொண்ட கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார். இவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, செக்க-சிவந்த-வானம், ஜாக்பாட்,தம்பி, போன்ற படங்களில் நடித்த ஜோதிகா சமீபத்தில் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து இருந்தார்.