பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா தன் கணவர் பற்றி வாய் திறக்காத காரணமே பிக் பாஸின் இந்த கட்டுப்பாடுகளால் தானாம்.

0
930
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருந்தனர். அந்த வகையில் பிரியங்காவும் ஒருவர் தான். இந்த சீசனில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா தன் கணவர் பற்றி பேசவே இல்லை, ப்ரீஸ் டாஸ்கில் கூட அவரது கணவர் வரவில்லை இதனால் பிரியங்கா தன் கணவரை பிரிந்துவிட்டதாக பலரும் புரளிகளை கிளப்பினார்.

-விளம்பரம்-

பிரியங்கா கணவர் பிரவீன் :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக பிரியங்கா லைவில் வந்த போது கூட அவரது ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டில் ஏன் பிரவீனை பற்றி பேசவில்லை. பிரவீன் எங்கே? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதை பார்த்தவுடன் பிரியங்கா, எல்லோரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு வெளிவந்த வீடியோவிலும் பிரியங்கா பிரவீனை பற்றி கேட்டதற்கு அவருக்கு கேமரா முன் வருவதற்கு கூச்சம்.

- Advertisement -

பிரியங்கா கணவர் குறித்து கேட்கும் ரசிகர்கள் :

அதுமட்டுமில்லாமல் அவர் கேமரா முன்பு அதிகமாக வர மாட்டார் என்று கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஒருவேளை இதனால்தான் பிரியங்கா, பிரவினை பற்றி பேசவில்லையோ? இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா? என்று பல யூகங்கள் கிளம்பிவிட்டது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில், தனது கணவர் குறித்து பிரியங்கா ஏன் பேசவில்லை என்பதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is image-125.png

பிக் பாஸ் Rules :

பிக் பாஸில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவருமே பிக் பாஸின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் உள்ளே செல்கின்றனர். அவர்கள் உள்ளே செல்லும் முன் பல நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு தான் உள்ளே செல்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸில் பிரியங்கா தனது கணவர் பற்றி பேசக் கூடாது என்பதும் ஒரு விதிமுறை இருக்கிறது. அது என்ன பிரியங்காவிற்கு மட்டும் இப்படி ஒரு விதி என்று நீங்கள் கேட்கலாம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-217.jpg

கணவர் குறித்து பேசாததற்கு காரணம் :

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக் பாஸில் பங்குபெறும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் குழுவில் பணியாற்றினால் அவர்களை பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் பேசக்கூடாது என்பது விதியாம். அந்த வகையில் பிக் பாஸின் இந்த சீசனில் பிரியங்காவின் கணவர் பிரவீன் Console Manager ஆகா பிக் பாஸ் குழுவில் பணியாற்றி வந்தாராம். அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் ப்ரியங்கா தன் கணவர் பற்றி வாய் திறக்கவே இல்லையாம்.

மறைமுகமாக பேசிய பிரியங்கா :

ஆனால் கிச்சனில் இருக்கும் போது ஒருசில முறை மறைமுகமாக பிரியங்கா தனது கணவர் குறித்து கூறியதை ஒரு சிலர் கவனித்திருக்கலாம். பிரியங்காவின் கணவர் பிரவீன் ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் பணியாற்றினார். அப்போது அவருடன் காதல் ஏற்பட்டு தான் பிரியங்கா அவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், பிரவீன் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு நிறைவடைந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட பிரவீன் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement