ரொம்ப கஷ்டப்படுறேன் உதவி செய்யுங்க – பூ, ரஜினி முருகன் பட நடிகர் ஹலோ கந்தசாமி.

0
2884
hello Kandasamy
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை அனைவருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவது இல்லை. குறிப்பாக எத்தனையோ துணை நடிகர்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளை நாம் பலவற்றை கேட்டுள்ளோம். அதிலும் இந்த கொரோனா வந்ததில் இருந்து பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அதே போல கொரோனா பிரச்சனையால் சினிமா துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரிய நடிகர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பினாலும் சினிமாவை நம்பியுள்ள துணை நடிகர்கள் பலரின் நிலையை இந்த கொரோனா ஊரடங்கு பெரிதும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக சினிமா துறையை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக கடந்தாண்டு முதல் தற்போது வரை பட வாய்ப்புகள் இன்றி பொருளாதாரத்தை இழந்து தனது குடும்பம் வறுமையில் வாடி வருவதாக  காமெடி நடிகர் ஹலோ கந்தசாமி வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கந்தசாமி. இந்த படத்திற்கு பின்னர் தான் இவருக்கு ஹலோ கந்தசாமி என்ற பெயரும் வந்தது. பூ படத்திற்கு பின்னர், மைனா, புலிக்குத்தி பாண்டி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள இவர், கொரோனா ஊரடங்கள் பட வாய்ப்பு குறைந்ததால் வறுமையில் வாடி வருதாக கூறியுள்ளார்.

எனது நடிப்பிற்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரமோ, அரசு விருதுகள் கிடைக்கவில்லை. நடிகர்களுக்கு நிவாரண உதவி அரசு அளிக்க வேண்டும். இந்த கொரோனாவால் என்னை போன்ற நிறைய கலைஞர்கள் மிகவும் பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கலைஞர்களுக்கு எல்லாரும் முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கால் வேலை எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டுவருவதாக அப்புகுட்டி தெரிவித்து இருந்தார். முதலில் சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புக்குட்டி, இப்போது கோவூரில் சென் ஜோசப் கல்லூரி அருகில் இருக்கும் பாலு தெருவில் வசித்து வருகிறார். இதுவும் வாடகை வீடுதான்.சொந்த வீடு வாங்குவதற்கு வசதியில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் அப்புக்குட்டி, இந்த கொரோனா இரண்டாம் அலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement