விஜய் படங்களை ஓயாமல் போடும் பிரபல தொலைக்காட்சி. ஆனால், அஜித்தின் ஒரு படத்தை கூட போடலையா ? ஏன் ?

0
24744
Vijay

தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில் விஜய் மற்றும் அஜித் தான் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்களது படங்கள் என்றாலே வசூல் சாதனைகளை படைத்துவிடும். அதேபோல இவர்களது படங்களின் உரிமையை பல்வேறு தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு கோடிகளில் வாங்கிவிடும். ஆனால், பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் இதுவரை அஜித்தின் ஒரு படத்தைக்கூட போட்டது கிடையாது என்ற ஒரு கேள்வி சமீபத்தில் எழுந்துள்ளது

விஜய் தொலைக்காட்சியில் விஜயின் நண்பன், துப்பாக்கி போன்ற பல படங்களை ஓயாமல் போட்டு வருகின்றனர். விஜய் படம் மட்டுமல்ல ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, தனுஷ் என்று அணைத்து டாப் நடிகர்களின் பல்வேறு நடிகர்களின் உரிமையை பெற்று அதனை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை ஒரு அஜித் படத்தை கூட விஜய் டிவி ஒரு முறை கூட ஒளிபரப்பியது இல்லை என்ற ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அவ்வளவு ஏன் விஜய் டிவி நடித்தும் விருது விழாவில் கூட பெரும்பாலும் அஜித்தை விஜய்க்கு தான் அதிக முறை விருதுகளை கொடுத்துவிடுகிறது. சரி, அஜித் வேண்டுமானால் விருதுகளில் பங்கேற்காமல் இருப்பதால் அவருக்கு விருது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அஜித் படத்தை விஜய் டிவி புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

அவ்வளவு ஏன் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான அமிதாப் பச்சனின் ‘பிங்க் ‘ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கூட ஹாட் ஸ்டார் பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது. ஆனால், நேர்கொண்ட பார்வை படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியது என்பது குய்ப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement