தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. 24 ஆம் புலிகேசி பட பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது படம் நின்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனால்வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.
https://twitter.com/kamalsanthaanam/status/1435208166812176384
இப்படி ஒரு நிலையில் வடிவேலுவின் ரெட் கார்டு தடையை நீக்கியது அதற்கு முக்கிய காரணமே கமல்தான் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் உறுதி படுத்தி இருக்கிறார் இயக்குனர் வி சேகர். இவர் தமிழில் வடிவேலுவை வைத்து ஒரு பல படங்களை இயக்கி இருக்கிறார்.
இவர், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பல்வேறு குடும்பப் படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் வடிவேலு இருப்பார். அதிலும் இவரது படங்களில் வடிவேலுவின் காமெடிகள் பெரும் ஹிட் அடித்தது.
https://twitter.com/rajaputthiran1/status/1435188001030561793
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் வடிவேலுவின் ரெட் கார்டு நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல் தான் என்றும், அவர் தான் லைகா நிறுவனத்திடமும் ஷங்கரிடமும் பேசி இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க உதவி செய்தார் என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் வடிவேலு, கமலுடன் சிங்காரவேலன் தேவர் மகன் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக வடிவேலு, கமல் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கமல் செய்துள்ள இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.





