நீங்கள் முஸ்லீம், அம்மா இந்து. அப்போ நாங்கள் என்ன மதம். மகளின் கேள்விக்கு ஷாருக்கான் அளித்த பதில். வீடியோ இதோ.

0
13919
shah-rukh-khan
- Advertisement -

இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ஷாருகான். உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் ஷாருக்கான் இந்தியில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகி இருக்கிறது அந்த வகையில் இவர் நடித்த பல்வேறு படங்கள் தமிழிலும் சூப்பர் ஹிட் அடைந்து உள்ளது. ஷாருக்கான் அவர்களுக்கு ஹிந்தியில் மட்டும் இல்லாமல் பல மொழியில் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். ‘கிங் ஆப் பாலிவுட்’ மற்றும் ‘கிங் கான்’ என்று தான் அழைக்கப்படுவார். இதுவரை இவர் 80க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
image

- Advertisement -

இவர் 1991 ஆம் ஆண்டு கௌரி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்தது. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் பிளஸ் 5’என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்கள் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நம் நாட்டில் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் பிரச்சினை குறித்தும் மனம் திறந்து பேசினார். அவர் பேசியது, நாங்கள் வீட்டில் எப்போதும் முஸ்லிம், இந்து என்று மதம் பற்றிய விவாதம் எழுந்தது கிடையாது. ஏனென்றால் என் மனைவி இந்து, நான் முஸ்லிம், என் குழந்தைகள் இந்தியர். பள்ளிக்கு செல்லும் போது என் குழந்தைகளிடம் மதம் பற்றி எழுதச் சொன்னார்கள். அப்போது என் மகள் ஒருமுறை என்னிடம் மதம் குறித்து கேட்டாள். அவளது பள்ளி படிவங்களில் மதம் குறித்த கேள்விக்கு என்ன பதிலளிக்க வேண்டும்? என்று அவள் என்னிடம் கேட்டாள். அதற்கு நான், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என எளிமையாக படிவத்தில் எழுதினேன்.

-விளம்பரம்-

மேலும், நான் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில்லை. ஆனால், நான் இஸ்லாமியன் தான். இஸ்லாத்தின் கொள்கைகளை நான் நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன். எனது மகனுக்கு ஆர்யான் என்றும், மகளுக்கு சுஹானா என்றும் பொதுவான பெயர்களைத் தான் வைத்து உள்ளோம். கான் என்பது எங்களுடைய அடைமொழிப் பெயர் என்பதால் பெயருடன் சேர்த்துக் கொண்டோம். ஒருவர் எந்த மதம் என்பதை பேசுவதை விட அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு இருப்பது தான் நாட்டில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் என்று கூறினார். இப்படி ஷாருக்கான் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஷாருக்கானுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement