விக்ரமின் அந்த படத்தை பார்த்துவிட்டு வெளிநாடு போக மாட்டேன்னு அடம்பிடித்தான் – தந்தையின் ரீ-வைண்ட் வீடியோ.

0
2278
karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவின் சகோதரர், நடிகர் சிவகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தி அவர்கள் 2007-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளி வந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமாயி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அவர்கள் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி, மெட்ராஸ், தோழா, காஷ்மோரா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் என பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அவர்கள் தன் அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு முதன் முதலில் படத்தில் இயக்குனராக வேண்டும் என்பது தான் கனவு. பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார். அதனால் தான் இவர் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அளித்திருந்தார். அதில் அவர் நடிகர் கார்த்தி சினிமாவிற்கு போவேன் என்று அடம் பிடித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

https://www.facebook.com/watch/?v=331550971152208

அதில் அவர் கூறியிருப்பது, சின்ன வயதில் இருந்தே கார்த்திக்கு சினிமாவில் தான் அதிக ஆர்வம். ஒரு முறை அவன் லீவுக்காக சென்னைக்கு வந்து இருந்தான். அப்போது விக்ரமோட காசி படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை பார்த்து விட்டு அவனுடைய மைன்ட் செட்டு ஃபுல்லா சினிமா துறை என்று முடிவு செய்துவிட்டான். வெளிநாட்டுக்கு படிக்க போக மாட்டேன்னு சொன்னான். நான் என்ன பாவம் பண்ணுனேன். போய் படி படின்னு சொல்றீங்களே. நான் எதை நோக்கி போக நினைக்கிறேன். ஆனால், இப்படி நீங்க பண்றீங்களேன்னு சொன்னான்.

-விளம்பரம்-

உடனே நான் உங்க அண்ணனுக்கு நடிக்கணும்னு ஆசை இல்லை. ஆனால், அவனுக்கு வாய்ப்பு தானா தேடி வந்தது. உனக்கு ஆசை இருக்கு. ஆனால், உனக்கு வாய்ப்பு வரல. இயக்குனர் பாலா, சங்கர் யாராவது வந்து ஆறு மாசத்துக்குள்ள உன்னை ஹீரோவாகுக்கிறேன் என்று சொல்ல சொல்லு நான் இப்போவே பாஸ்போர்ட்டை கிழித்துப் போட்டுறேன் என்று சொன்னேன். உடனே அவன் படிக்க வெளிநாட்டிற்கு சென்று விட்டான். வெளிநாட்டுக்கு போய் படிப்பை முடித்துவிட்டான்.

Vikram's Cobra, Karthi's Sultan affected by coronavirus ...

மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். ஆனால், அவன் இந்தியா தான் என்னுடைய நாடு, சினிமா தான் என்னுடைய உலகம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான் என்று கூறினார். தற்போது நடிகர் கார்த்தி அவர்கள் சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவகிறார்.

Advertisement