பிரபல நடிகரை கத்தியால் குத்திய வழக்கு, கைது செய்யப்பட்ட பாகவதர், சிறையில் இருந்த போதே 2 வருடம் ஓடிய படம்.

0
485
thiyagarayar
- Advertisement -

தமிழ் திரைப்படத் துறையில் மிகப் பிரபலமான கதாநாயகனாகவும், கர்நாடக சங்கீதப் பாடகராகவும் திகழ்ந்தவர் தியாகராஜ பாகவதர். இவர் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த பவளக்கொடி என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதில் இவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் என்ற படம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது. இப்படி புகழின் உச்சத்தில் இருந்த பாகவதர் கைது செய்து சிறையில் இருந்த சம்பவம் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.

-விளம்பரம்-

1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் என்ற பத்திரிக்கையாளரை கத்தியால் குத்தி கொலை செய்து இருந்தார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் மூன்று பேர் திரையுலகை சேர்ந்த ஜாம்பவான்கள். அதில் ஒருவர் தியாகராஜ பாகவதர். அதாவது, லட்சுமிகாந்தன் 1940 இல் சென்னையில் சினிமா தூது என்ற சினிமா பத்திரிக்கை நடத்தி வந்தார். சினிமா கிசுகிசு பயில்வான் ரங்கநாதன் போன்று 10 ஆளுக்கு இவர் சமம் என்று சொல்லலாம். யார் யாருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள் என்பது போன்ற பல கிசுகிசுக்களை இவருடைய பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார். அதில் பெரும்பாலானவை அவருடைய கற்பனையில் எழுதப்பட்டவையே. அவருக்கு பயந்து தங்களைப் பற்றி எழுதாமல் இருக்க சினிமாக்காரர்கள் அவருக்கு காசு தருவார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : அவரை மீட் பண்ணனும் அவரின் மேனேஜர்க்கு கால் பண்ணேன், ஆனா – நடிகர் சங்க தலைவரையே மதிக்காத அஜித்.

லட்சுமிகாந்தன் பத்திரிக்கை:

இவரின் அட்டகாசம் அதிகரித்ததால் பலரும் புகார் செய்து இருந்தார்கள். பின் அந்த பத்திரிக்கைக்கு அரசு மூடுவிழா நடத்தியது. அப்போது உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். காகிதத் தட்டுப்பாடு காரணமாக புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு யாருக்கும் அனுமதி தரவில்லை. அதனால் ஏற்கனவே வந்து கொண்டிருந்த இந்து நேசன் என்ற பத்திரிக்கையை வாங்கி அதில் தனது கிசு கிசு கருத்துக்களை பரவ ஆரம்பித்திருந்தார் லட்சுமிகாந்தன். அவருக்கு பணம் தராதவர்கள் பட்டியலில் பாகவதரும், என். எஸ். கிருஷ்ணனும் இருந்தார்கள். இதுதான் லக்ஷ்மிகாந்தன் கொலை பின்னணி காரணம்.

-விளம்பரம்-

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு:

1944 ஆம் ஆண்டு இரவு புரசைவாக்கத்தில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனை சிலர் கத்தியால் குத்தினர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மறு நாள் காலமானார். இறப்பதற்கு முன்பு அவர் சொன்ன தகவலை வைத்து பாகவதர் உட்பட 8 பேரை கைது செய்திருந்தனர். கைதான அன்று பாகவதர் வால்மீகி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கொள்ளைக்காரரான வால்மீகியை கைது செய்து அரசர் முன் நிறுத்துவது போன்ற காட்சி. அதில் பாகவதர், நான் ஒரு கைதி என்று தொடங்கும் வசனத்தை பேசி நடித்து இருந்தார்.

கைதான பாகவதர்:

அன்று மாலையே அவர் கைது செய்யப்பட்டார். பின் சம்பவம் நடந்த அன்று தான் மும்பையில் இருந்ததை நிரூபித்து ஸ்ரீராமுலு நாயுடு வழக்கிலிருந்து தன்னை விடுவித்து வெளியே வந்து இருந்தார். மற்ற ஏழு பேர்களில் பாகவதர், கலைவாணர் உட்பட ஆறு பேர் கொலை சதியில் தொடர்புடையவர்கள் என நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பாகவதர் சிறையில் இருந்த போது அவரது ஹரிதாஸ் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. பின் பாகவதர், கலைவாணர் மேல்முறையீடு செய்தனர். அவரை வைத்து படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த முன்பணத்தை அவர்கள் திரும்பி வாங்கிக் கொண்டனர். பின் இவர்கள் தங்கள் வழக்கை மறுவிசாரணை செய்ய லண்டன் ப்ரிவீயூ கவுன்சிலுக்கு கொண்டு சென்றனர்.

பாகவதர் இறப்பு:

பின் மறுவிசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு போட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி அவர்களை விடுவித்தது. சிறையில் இருந்து வந்த பிறகு கலைவாணர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், பாகவதருக்கு பட வாய்ப்பு அமையவில்லை. அவரின் வாழ்க்கை நிலைகுலைய செய்ததது. தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரும், தங்கத் தட்டில் சாப்பிட்ட தன்மானவர் கடைசி காலத்தில் வறுமையில் பிடியில் மரணமடைந்தார். ஒரு கிசுகிசு எழுத்தாளரால் ஒரு சிறந்த நடிகரின் வாழ்வு சோகத்துடன் அஸ்தமித்தது.

Advertisement