நடிகர் பிரசாந்தின் இரண்டாம் திருமணம் குறித்து அந்தகன் படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் தியாகராஜன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் தியாகராஜனின் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது.

பின் இடையில் இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார். இதனால் பிரசாந்த், இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அந்தகன். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அந்தகன் படம்:
இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலரும் பிரசாந்தின் நடிப்பை பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் அந்தகன் படத்தினுடைய வெற்றி விழா தற்போது நடைபெற்று இருக்கிறது.

அந்தகன் படத்தின் வெற்றி விழா:
இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது விழாவில் கே. எஸ். ரவிக்குமார், தியாகராஜனை பார்த்து பிரசாந்துக்கு எப்போது கல்யாணம் பண்ண போறீங்க? என்று கேட்டிருக்கிறார். அதற்கு தியாகராஜன், எனக்கு பிரசாந்த் உடைய திருமணம் தான் ரொம்ப மன வேதனையை அளிக்கிறது. நானும், பிரசாந்த் உடைய அம்மாவும் அதைப் பற்றி பேசாத நாளும், நேரமே கிடையாது.
பிரசாந்த் 2-வது கல்யாணம் எப்போ? வற்புறுத்தி கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்... மனம் வருந்தி பேசிய தியாகராஜன்!#Andhagan #Prashanth #PriyaAnand #Thiagarajan #Simran #KSRavikumar #VanithaVijayakumar #NewsTamil24x7 pic.twitter.com/FrnVxjt7zj
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) August 16, 2024
தியாகராஜன் சொன்ன விஷயம் :
அவருடைய அம்மா நல்ல குடும்ப பாங்கான பொண்ணுக்காக ரொம்ப மும்முரமாக தேடிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவிலேயே பிரசாந்துக்கு திருமணம் நடைபெறும். இப்போது அடுத்த பட வேலைகள் எல்லாம் ஒத்திவைத்து பிரசாந்த் திருமணத்தில் தான் நாங்கள் ஈடுபட இருக்கிறோம். மீண்டும் ஞாபகப்படுத்திய ரவிக்குமார் சாருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும், ஏற்கனவே அளித்த பேட்டியில் பிரசாந்த் இடம் இரண்டாம் திருமணம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

பிரசாந்த் திருமணம்:
அதற்கு பிரசாந்த், திருமணம் கண்டிப்பாக நடக்கும். திருமணத்திற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். நடிகர் பிரசாந்துக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை தான் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆகி சில நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரசாந்த் மற்றும் மனைவி மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். பின் நடிகர் பிரசாந்தை விட அவர் வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது. இதனால் பிரசாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.






