கருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

0
930

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தூத்துக்குடி’ சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்.

Actress-Karthika

இந்த படத்தில் இடம்பெற்ற ‘கறுவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட் அடைந்தது. மேலும், கார்த்திகா நடித்த ‘பிறப்பு’ படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.

1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் அதன் பின்னர் ஆடிஷன் மூலம் இவருக்கு தூத்துக்குடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தூத்துக்குடிபடத்திற்கு பின்னர், பிறப்பு, நாளைய பொழுது உன்னோடு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

Actress-Karthika

தமிழில் பல்வேறு படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இறுதியாக தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘இவர் பட்டாளம் ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவில்லை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை.