தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல். நேற்று கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது.
மேலும், இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலுமே வெளியாகி இருக்கிறது.
தக் லைஃப் படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 2200 திரையரங்குக்கு மேல் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இருந்தாலுமே முதல் நாளே இந்த படம் படும் மோசமான விமர்சனங்களை தான் குவித்திருக்கிறது. கமல் ரசிகர்களே இந்த படத்தை திட்டுவதாக கூறப்படுகிறது. இந்த படம் இந்தியன் 2வை விட மோசமாக இருப்பதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

படத்தின் வசூல்:
இந்த படம் முதல் நாளே 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் முதல் நாளில் உலக அளவில் 25 முதல் 30 கோடி வரை தான் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் இந்த படம் 17 கோடி வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 15.4 கோடி, தெலுங்கில் 1.5 கோடி வசூல் செய்து இருக்கிறது. படும் மோசமாக வசூலிப்பது ஹிந்தியில் தான். அங்கு ஓடி ஓடி ப்ரமோஷன் செய்தும் 10 லட்சம் கூட வசூலிக்கவில்லை. இனி வரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூல் செய்யும் என்பது சந்தேகம் தான்.

கதைக்களம்:
படத்தில் கமலஹாசன் டெல்லியில் தாதாவாக இருக்கிறார். இவருக்கும் தாதா மகேஷ் என்பவருக்கும் இடையே தான் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த தாதா கேங்கை அழிக்க போலீஸ் திட்டமிடுகிறது. இதனால் போலீசுக்கும் கமலுக்கும் இடையே நடந்த தகராறில் சிம்புவுனுடைய அப்பா கொல்லப்படுகிறார். சின்ன வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து சிம்பு அனாதையாக நிற்கிறார். அதோடு அந்த பிரச்சனையில் தன்னுடைய தங்கையையும் விட்டு பிரிகிறார் சிம்பு. அதற்குப் பின்னால் கமலஹாசன், சிம்புவை எடுத்து வளர்க்கிறார். தன்னுடைய சாம்ராஜ்யத்தின் அடுத்த அரசனாக சிம்புவை ஆக்க கமல் நினைக்கிறார். இதற்கிடையில் கமலஹாசனை கொள்ளவும் சதி நடக்கிறது.
அதற்குப்பின் தனக்கடுத்து சிம்பு தான் என்று எல்லோரிடமும் கமல் சொல்கிறார். அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக கமலஹாசன் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் கமலஹாசன் அடிபட்டு ஹாஸ்பிடலும் இருக்கிறார். ஆனால், இதை சிம்பு தான் செய்ய சொன்னார் என்று கமல் தவறாக புரிந்து கொள்கிறார். இதையெல்லாம் அறிந்த சிம்பு மனம் உடைந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சிம்புவே கமலஹாசனை கொல்லவும் நினைக்கிறார். இதை அறிந்த தாதா குரூப், சிம்புவையும் கமலையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். சிம்புவும் கமலை கொல்ல ஆக்ரோஷமாக திட்டமெல்லாம் போடுகிறார். இறுதியில் சிம்புவின் சதி திட்டம் பலித்ததா? கமலஹாசனுக்கு என்ன ஆனது? மற்ற தாதாக்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






