கொள்ளை அடிக்க போன எடத்துல கிராம சபை கூட்டத்த நடித்திட்டு இருக்காரு அஜித் – துணிவு படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை

0
717
blue
- Advertisement -

வாரிசு படத்தை வச்சி செய்ததை தொடர்ந்து தற்போது துணிவு படத்தின் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து இவர் தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான துணிவு படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் மாறன். துணிவு படம் வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

துணிவு இந்த படத்தில் இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார். அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சர்வதேச அளவில் ஏஜெண்டாக செயல்படும் ஒரு கும்பல் ஏன்? இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர் என்பதும், அவர்கள் எதற்காக கொள்ளையடிக்கின்றனர்? அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்ன? என்பது படத்தின் மீதிக்கதை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘படத்தில் ஒரு சீனை கேட்டு தான் அஜித் இந்த படத்திற்கு ஓகே சொன்னார் என்று வினோத் கோரி இருந்தார் ஆனால் படத்தில் அந்த காட்சியும் இடம்பெறவில்லை. ஒரு நல்ல கதையை உருவாக்கி அதை படமாக எடுப்பார்கள் ஆனால் இவங்க ஒரு படத்தை எடுத்து விட்டு அதை ஒரு கதையாக மாற்றி இருக்கிறார்கள்’

கொள்ளையடிக்க சென்று விட்டு கிராம சபை கூட்டத்தை போல மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் ஹீரோ ஆனால் நம்ம குறையை கேட்கத்தான் ஆள் இல்லை தமிழ் சினிமா வழக்கப்படி ஆயிரம் பேர் ஹீரோவை நோக்கி சொன்னாலும் எதுவுமே அவர் மீது பட மாட்டேங்குது அப்படியே பட்டாலும் குண்டுக்கு தான் ஏதாவது ஆகிறது தவிர இவருக்கு ஒன்றும் ஆக மாட்டேங்குது பொங்கல் அன்று தீபாவளி பார்த்த மாதிரி இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement