துணிவு படத்தின் அடுத்த அப்டேட்டா? படமே 3 நாளில் வந்துரும் – ஹெச் வினோத்

0
426
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் நடித்துள்ள துணிவு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் நிலையில் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் அப்டேட் குறித்து இயக்குனர் வினோத்திடம் கேட்டு நச்சரிப்பதாக அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். பொங்கல் விழாவையொட்டி தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் 8 வருடங்கள் கழித்து வாரிசும் துணிவும் ஒன்றாக வெளியாக இருக்கின்றது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் ஹச். வினோத் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார் அந்த `பேட்டியில் ரசிகர்கள் துனிவு படத்தின் தயாரிப்பாளர் “போனி கபூரின்” காணவில்லை என்ற போஸ்டரை ரசிகர்கள் தயார் செய்து சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருவதை அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹச் வினோத் போனி கபூர் அந்த போஸ்டரை தனக்கு அனுப்பி ஏதாவது அப்டேட் இருந்தால் அஜித் ரசிகர்களுக்கு கொடுக்குமாறு சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டார் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இயக்குனர் வினோத் கூறுகையில் `போனி சித் ஒரு தயாரிப்பாளர், அதே போல அவரது மகன் போனி கபூரும் ஒரு தயாரிப்பாளராக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இருந்துள்ளார். அவர்களுடைய மொத்த வாழ்க்கையிலும் சினிமா என்பது ஊறி இருக்கிறது. இதுவரை அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரின் பெயரை உபயோகப்படுத்தியது போல யாரும் செய்யவில்லை. நாம் ட்விட்டரில் கனெக்கெடுப்பு ஒன்றை எடுத்தால் கண்டிப்பாக போனி கபூரின் பெயர் பல கோடி முறை ரசிகர்கள் பயன்படுத்தி இருப்பார்கள்.

இதனால் போனி கபூர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரசிகர்களுக்காக நாங்கள் மொத்தம் 6 முதல் 7 அப்டேட்டுகள் வரையில் கொடுத்து விட்டோம். உதாரணமாக பாடல்கள், டீஸர், படத்தின் பிண்ணனி காட்சிகளில் ட்ரைலர் போன்றவை. கடந்த 60 நாட்களில் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமறை படத்திற்கான அப்டேட் கொடுத்து கொண்டுதான் வருகிறோம். ஒரு வேலை ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து அப்டேட் கேட்டுக்கொண்டிருந்தால் படத்தின் கதையே இல்லாமல் போயிருக்கும்.

-விளம்பரம்-

இதனால் படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அஜித்தின் முந்திய படமான “வலிமைக்கும்” அப்படைத்தான் நடந்தது. ரசிகர்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்ததால் படத்தின் சில காட்சிகளை வெளியிட வேண்டுய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். இதானால் படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை எளிதாக ரசிகர்களால் கணிக்க முடிந்தது. மேலும் இந்த விஷியத்தினால் ரசிகர்களுக்கும் திரைக்கதையில் சுவாரசியம் குறைந்து விட்டது என்று அந்த பேட்டியில் கூறினார் இயக்குனர் ஹெச். வினோத்.

Advertisement