அப்போ போன் வாங்கனும்னா குருவி வளக்கனுமா ? தன்னை பற்றிய உருட்டிய அபிஷேக், வினோத் கொடுத்த பதிலடி.

0
551
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் எச் வினோத். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஹிட் கொடுத்த வினோத்திற்கு மூன்றாவது படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

துணிவு :

இதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.இந்த நிலையில் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தை இயக்கி தற்போது திரையரங்குளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் அபிஷேக் :

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் பேசும் போது அபிஷேக்கிடம் ஹச். வினோத்தை பற்றி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர் எச் வினோத் நான் இப்பொது தொலைபேசியில் அழைத்தால் கூட என்னிடம் “தலைவரே” என்று பேசுவார். இதை நான் பெருமைக்கு சொல்கிறேன் என்று கூட நினைக்கலாம் என்று ஏன் இயக்குனர் எச் வினோத் கார் வாங்காத காரணம் குறித்து கூறினார்.

ட்ரோல் செய்த நெட்டிசன்கள் :

அவர் கூறுகையில் ` வினோத் ஒரு வகையான நபர், தனது கார் வெளியிடும் மாசுபாட்டிற்கு சமமான மரங்களை தான் நட்ட பிறகுதான் கார் வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். தனிப்பட்ட நபர் வாழும் சித்தாந்தம் உள்ள ஒரு மனிதர் என்று கூறினார் பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா. இந்த வீடியோ ஷோவில் மீடியாவில் வைரலாக நிலையில் பலரும் எச்.வினோத்தை ட்ரோல் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

வினோத் கூறியது :

இந்த நிலையில் தான் எச் வினோத் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் அபிஷேக் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து கூறினார். அவர் கூறுகையில் `நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை, நான் எப்படி அந்த விஷியத்தை பார்க்கிறேன் என்றால் நாம் ஒருவரை பற்றி பெருமையாக சொல்லும் போது சில வார்த்தைகளும் பொய்யும் கலந்து விடுகிறது. உதாரணமாக நான் எப்பாவது நடந்து சென்றிருப்பேன் எனவே நான் எப்போதும் நடந்து செல்வதாக எண்ணியிருப்பார்கள்.

அப்படியெல்லாம் கிடையாது :

நான் தனிப்பட்ட முறையில் கார் வாங்காமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனர். எனக்கு வேலை செய்யும் இடத்திலேயே கார் கொடுத்து விடுகின்றனர். உதாரணமாக நான் இப்போது அஜித்துடன் படம் செய்யும் போது கார் என்கூடவே இருக்கும். அதே போல அடுத்த படம் எடுக்கும்போதும் அந்த குழு ஒரு காரை தருவர்கள். இப்படி இருக்கும் போது ஏன் நான் ஒரு காரை வாங்கி வீட்டில் பூட்டி வைத்திருக்க வேண்டும். எனவே அந்த மாதிரியான விஷியங்களினால் தான் நான் கார் வாங்கவில்லை.

செல்போன் வாங்க குருவி வளர்க்கணுமா ? :

அதை தவிர்த்து மரம் நட வேண்டும் என்ற காரணமெல்லாம் இல்லை, என்னுடைய மனைவி கூட இந்த விஷியத்தை கூறி கேலி செய்தார்கள். அதோடு யாரோ ஒரு நபர் கமெண்ட் செய்திருந்தார் போன் வாங்க வேண்டும் என்றால் குருவியை வாங்கி விடுவாரா? என்று. அப்படியெல்லாம் கிடையாது பொதுவாக எனக்கு இயற்க்கை மேலே ஒரு அன்பு இருக்கிறது அதை தவிர இதை செய்தால்தான் இதை செய்வேன் என்றெல்லாம் கிடையாது என்று குடியிருந்தார். இந்த வீடியோ வைரலாக நிலையில் பலரும் இதனை பகிர்ந்து பிக் பாஸ் அபிஷேக்கை கேலி செய்து வருகின்றனர்.

Advertisement