Dupe போட்டு நடித்தாரா அஜித் – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போனி கபூர் வெளியிட்ட வீடியோ.

0
890
ajith
- Advertisement -

துணிவு படத்தில் அஜித் Dope போட்டு நடித்துள்ளார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போனி கபூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரும் தோல்வியை சந்தித்து இருந்தது.

-விளம்பரம்-

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் – வினோத் கூட்டணியில் துணிவு படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும், பிக் பாஸ் புகழ் அமீர், பாவனி, சிபி என்று பலர் நடித்து இருந்தனர். வங்கியில் நடக்கும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது.

- Advertisement -

நடிகர் அஜித் குமார் அவர்கள் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அது போல இந்த வலிமை படத்தில் பல பைக் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்தார். ஆனால், அஜித் படங்கள் என்றாலே அதில் பைக் காட்சி இருக்கும் என்ற விஷயம் போக போக கேலிக்கு உள்ளானது. இதனால் துணிவு படத்தில் பைக் காட்சிகள் பெரிதும் இடம்பெறவில்லை.

மாறாக கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது, துணிவு படத்தில் கூட அஜித் ஒரு ஜெட்ஸ்கியை ஓட்டி செல்வது போல ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அந்த காட்சியில் வருவது அஜித்தே இல்லை என்றும் இந்த படத்தில் பல ஸ்டண்ட் காட்சியில் அஜித்துக்கு பதில் நடித்தது வேறு ஒரு நபர் என்றும் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வந்துகொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த விமர்சனம் குறித்து பேசிய மஞ்சு வாரியர் ‘ துணிவு படத்தில் முழுக்க 100 சதவிகிதம் அஜித் தான். ,அஜித் அவர்களுக்கு ஓட்ட தெரியாத வாகனமே கிடையாது. எனக்கு அதுதான் முதல் முறை என்பதினால் அஜித் எனக்கு சொல்லி கொடுத்தார். அந்த காட்சி பாங்காக்கில் எடுத்து என்பதினால் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அஜித் எங்களுக்கு எப்படி jet Ski ஓடுவது என்று கற்றுக்கொடுத்தார்.

அது மிகவும் திரிலங்காக இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சி என்னுடைய போனில் கூட இருக்கிறது என்று கூறினார் மஞ்சு வாரியார். இருந்தும் அஜித் இந்த படத்தில் Dupe போட்டு தான் நடித்தார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement