தமிழகத்தில் துணிவு படத்திற்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் கடைசியாக வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துணிவு படம்:
மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறாராம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் சமீபத்தில் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டும்தான் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை மவுண்ட் ரோட்டில் இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. அப்போது அஜித் உடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம்:
இந்நிலையில் துணிவு படத்திற்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித்தின் துணிவு படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஒரு மாதத்திற்கு முன்பே ரெட் ஜெயின் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் துணிவு படத்திற்கான திரையரங்கங்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் துணிவு திரைப்படத்திற்கு திரையரங்கங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
திரையரங்கு ஒப்பந்தம்:
குறிப்பாக ஒற்றைத் திரையரங்கங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது. முதல் வாரத்தில் விநியோகஸ்தருக்கு 75% , திரையரங்கு உரிமையாளர்களுக்கு 25%, இரண்டாவது வாரம் விநியோகஸ்தருக்கு 70%, திரையரங்குகளுக்கு 30% என்ற அடிப்படையில் திரையரங்குகளை துணிவு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்து வருகிறது. ஆனால், விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கும் நிலையில் இன்னும் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமா? என்பதே கேள்விகுறியாக இருக்கிறது.