வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பிரசாந்த் – துணிவு தயாரிப்பளார் Thug Life பதில் – Troll செய்யும் நெட்டிசன்கள்.

0
462
thunivu
- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-
varisu

அஜித் மற்றும் விஜய் படங்கள் 8 வருடங்கள் கழித்து இருவரது திரைப்படங்களும் ஒன்றாக வெளியாவதினால் சோசியல் மீடியாவில் சரி, வெளியிலும் சரி பல சண்டைகளும் ஏற்பட்டன. திரையரங்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணனடிகள் உடைக்கப்பட்டன, போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயற்சி செய்த்தனர். இதனால் அந்த இடங்கள் முக்குவதும் கலவர பூமியாக காட்சியளித்து. ரோகினி திரையரங்கம் இந்த மோதலில் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு வாரிசு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் வாரிசு விநியோகஸ்த்தர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சோசியல் மீடியாக்களில் அறிவித்தனர். இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயில் ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

பிரசாந்த் மற்றும் ராகுல் ட்விட் பதிவு :

மேலும் “துணிவு” ரசிகர்கள் ஒருபுறம் மக்களின் வெற்றி என கூறிய நிலையில் “வாரிசு” படம் குடும்பங்கள் கொண்டாடும் பொங்கல் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் ஸ்ரீ ராஜேஸ்வரி திரையரங்கம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தது. இதற்கு பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் “நல்ல காலம் திரையரங்கங்களுக்கு என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

துணிவு நிர்வாக தயாரிப்பாளர் :

பிரசாந்த் போட்டிருந்த ட்விட் பதிவை ரீட்விட் செய்த “துணிவு” பட நிர்வாக தயாரிப்பாளர் ராகுல் “தோழரே இது சிங்கிள் ஸ்க்ரீன் தோழரே.. துணிவு படம் மற்றும் சிங்கிள் ஸ்க்ரீன் இரண்டையும் வைத்திருக்கும் மல்டிபிளக்ஸைப் பார்த்து வாருங்கள்.. நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்… எப்படியும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழரே என்று பதிவிட்டிருந்தார். பின்னர் பிரசாந்த் இந்த பதிவை ரீடிவிட் செய்தி தலைவரே கொஞ்சம் அமைதி கொள்ளுங்கள் இரண்டு படங்களுமே பெரிதாக வெற்றியடையும் என்று கூறினார்.

கேலிக்குள்ளான ட்விட்டர் பதிவு :

இப்படி தொடர்ந்த கருத்து பதிவில் சினிமா விமர்சகர் பிரசாந்த் “நீங்கள் தயாரிப்பாளர் தானே, ஏன் மொத்த வசூலை கூறி விமர்சகர்களை வாயை மூட வைக்கக்கூடாது என்று பதிவுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் ராகுல் ”துரதிர்ஷ்டவசமாக ஆந்திராவும் தமிழகமும் ஒரே மாதிரி இல்லை. இங்கு வியாபாரம் வேறு! நான் ஒரு சரியான தொழிலதிபர் என் அலுவலகத்திற்கு வாருங்கள் தோழரே ஒரு காஃபி அருந்தி கொண்டு விவாதிப்போம் என்று கூறினார். இந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்குள்ளாகி இருக்கிறது.

Advertisement