துணிவு படத்தில் கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர் – அஜித் செய்துள்ள செயல்.

0
634
Ajith
- Advertisement -

பொங்கல் திருவிழாவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் ஒன்றாக வெளியாகியது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

அஜித் நடித்திருந்த “துணிவு” படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே `வாரிசா? துணிவா? என்ற பிரச்னைதான் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. அதோடு “துணிவு” மற்றும் “வாரிசு”  இரண்டு படங்களின் நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்பதினால் திரையரங்குகள் யாருக்கு கொடுப்பது? என்ற குழப்பமும் இருந்து வந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவுக்கு சமமான திரையங்குகள் கொடுக்கப்பட்டன.

- Advertisement -

ரோகினி திரையரங்கம் :

மேலும் டிக்கெட்டுகள் ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த நிலையில் அஜித் படம் காலாம் காலமாக வெளியாகி வரும் ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி அங்குள்ள அஜித் பேனர்கள் கிழித்து எறியப்பட்டனம்,கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பதர்டடமான சூழ்நிலை நிலவியது.

ரசிகர் உயிர் பலி :

இந்த சூழ்நிலையில் தான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்ற கண்டைனர் லாரி மீது ரசிகர் பரத்குமார் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத பரத்குமார் கீழே விழுந்ததில் முதுகுத்தண்டில் பலத்த காயம் கீழே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜித் மீது பலர் கண்டணங்களையும் தெரிவித்தனர்.

-விளம்பரம்-

உயிரிழந்த ரசிகர் குடும்பத்தை சந்தித்த சரத்குமார் :

இந்த நிலையில் தான் நடிகர் வாரிசு படத்தில் நடித்த சரத்குமார் உயிரிழந்த பரத்குமார் குடும்பத்தை சந்தித்தது விசாரித்தார். மேலும் சில உதவிகளையும் செய்தார். இந்த விஷயம் வைரலாக நிலையில் உயிரிழந்தவர் அஜித் ரசிகர் என்று தெரிந்தும் அஜித் சார்பில் எந்த தகவலும் வராத நிலையில் துணிவு படத்தின் சண்டை பயிற்சியாளர் கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. துணிவு படத்தில் வசனம், காமெடி, பாடல் காட்சிகளை விட அதிகமாக இடம் பெற்றது சண்டை காட்சிகள் தான்.

வருத்தப்பட அஜித் :

அந்த சண்டை கட்சிகள் படத்திற்கு நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என இரண்டு பக்கங்களை கொடுத்து என்று சொல்லலாம். அந்த வகையில் துணிவு படத்தின் சண்டை கட்சிகளுக்கு சுப்ரீம் சுந்தர் பயிற்சியாளராக அமர்த்தப்பட்டர். இந்த நிலையில் அவர் கூறுகையில் `ரசிகர் உயிரிழந்தார் என்று அரித்ததும் அஜித் மிகவும் வருத்தப்பட்டார். அந்த காரணமாகத்தான் துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட வில்லை என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement