‘ஹீரோ வேலைய எல்லாம் நான் பாத்துக்கறேன்’ வெளியானது துணிவு பட ட்ரைலர்.

0
741
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாருடன் கைகோர்த்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் “சில்லா சில்லா” பாடலும் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது.

- Advertisement -

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “வாரிசு” படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்ற தகவல சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் சார்பட்ட, நட்பே துணை, பண்ணி குட்டி போன்ற படங்களில் நடித்திருந்த தங்கதுரையும் நடித்திருப்பதாக தகவல்வெளியாகின. தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர்.

-விளம்பரம்-

அதோடு வாரிசு மற்றும் துணிவு குழு தங்கள் படத்தின் ட்ரைலரை இந்தாண்டு இறுதி, அதாவது இன்று 31-ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.இருப்பினும் தங்கள் படங்களின் அப்டேட்டை ரசிகர்களுக்கு போட்டிபோட்டு முண்டியடித்து வழங்கி வருகிறது இரு படக்குழுவினரும். அந்த வகையில் நேற்று துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது.

அதில் பட்டிமன்ற பேச்சாளர்  மோகன சுந்தரம் – மை பா, பிரேம் – பிரேம்,ஜான் கோக்கன் – கிரிஷ்,வீரா – ராதா,சி.எம்.சுந்தர் – முத்தழகன்,அஜய் – ராமச்சந்திரன்,சமுத்திரக்கனி – தயாளன், மஞ்சு வாரியர் – கண்மணி என்று பலரின் பெயர்களை அறிவித்து இருந்தது. ஆனால், அஜித்தின் போஸ்டரில் மட்டும் கேள்விக்குறியோடு விட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.. மேலும், இந்த படத்தில் அஜித் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement